தூத்துகுடி விவகாரம்: ரஜினிகாந்த் தாக்கல் செய்த மனு!

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை ரஜினிகாந்த் கூறியதாக கூறப்பட்ட நிலையில் அவரிடம் விசாரணை செய்ய வேண்டும் என்று அவருக்கு இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தை விசாரனை செய்து வரும் ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.

இந்த நிலையில் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பான விசாரணைக்கு நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு கேட்டு ரஜினிகாந்த் மனு அளித்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளது. விசாரணை ஆணையம் கேட்க வேண்டிய கேள்விகளை எழுத்து மூலமாக கேட்டால் அதற்கு எழுத்துப்பூர்வமாக பதில் அளிக்க தயார் என ரஜினிகாந்த் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

முன்னதாக தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக நேரில் சென்று பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறிய ரஜினிகாந்த் அதன் பின்னர் அளித்த பேட்டியில் ’இந்த துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு சமூகவிரோதிகள் தான் காரணம் என்று கூறியிருந்தார். இது குறித்து ரஜினியிடம் விசாரிக்க வேண்டும் என சீமான் உள்ளிட்டோர் கோரிக்கை விடுத்ததை அடுத்து ரஜினிகாந்துக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.