திமுக பெண் எம்.எல்.ஏவுக்கு கொரோனா தொற்று: மகள், மருமகனுக்கும் பாதிப்பு என தகவல்

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக திமுக, அதிமுக எம்.எல்.ஏக்கள் மற்றும் ஒருசில அமைச்சர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பதை அவ்வப்போது பார்த்து வருகிறோம். நேற்று ராஜபாளையம் எம்.எல்.ஏ தங்கபாண்டியன் அவர்களுக்கும் இன்று காலை பேராவூரணி அதிமுக எம்எல்ஏ கோவிந்தராஜூக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது என்பது தெரிந்ததே. இதனையடுத்து இன்று காலை வரை கொரோனாவால் பாதிக்கப்பட்ட எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை 18ஆக இருந்தது.

ஆனால் தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்ட எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை 19ஆக உயர்ந்துள்ளது. தூத்துகுடி திமுக எம்எல்ஏ கீதா ஜீவன் அவர்களுக்கு கொரோனா என்பது சற்றுமுன் உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் அவரது மகளும், மருமகனும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதனையடுத்து மூவரும் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது

ஏற்கனவே தமிழகத்தில் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6000ஐ தாண்டியுள்ள நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 

More News

என்னது… முகக்கவசம் அணியவில்லை என்றால் ரூ. 1 லட்சம் அபராதமா??? அதிரடி காட்டும் மாநிலம்!!!

ஜார்கண்ட் மாநில சட்ட சபையில் நேற்று புதிதாக ஒரு அவசரச் சட்டம் கொண்டு வரப்பட்டு இருக்கிறது.

முதன்முறையாக 6,000ஐ கடந்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை: அதிர்ச்சி தகவல் 

தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை கடந்த சில நாட்களாக 4000க்கும் அதிகமாக இருந்த நிலையில் நேற்று மட்டும் 6000ஐ நெருங்கியுள்ளதால்

இந்தியாவில் தங்கக் கடத்தல் தொடர்ந்து அதிகரிப்பதற்கு காரணம் என்ன தெரியுமா???

சமீபக் காலமாக வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்குத் தங்கம் கடத்தப்படுவது தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது.

பாஜகவில் இணைந்தார் பிரபல தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்

கடந்த சில மாதங்களாக பாஜகவில் சினிமா பிரபலங்கள் இணைவதும் அவர்களுக்கு பாஜகவில் பொறுப்புகள் அளிக்கப்பட்டு வருவதுமான செய்திகள் வெளியாகி வருவதை பார்த்து வருகிறோம்.

வனிதா விவகாரத்தில் கைது செய்யப்பட்ட சூர்யாதேவிக்கு ஜாமீன்: கஸ்தூரி தகவல்

வனிதா திருமண விவகாரத்தில் அவதூறாக பேசியதாகவும், கொலை மிரட்டல் விடுத்து வீடியோ வெளியிட்டதாகவும் சூர்யா தேவி என்ற பெண் நேற்று இரவு கைது செய்யப்பட்டார்