பாஜகவுக்கு எதிராக கோஷமிட்ட சோபியாவுக்கு ஜாமீன்

  • IndiaGlitz, [Tuesday,September 04 2018]

தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்திரராஜன் முன்பு 'பாஸிச பாஜக ஒழிக' என்று கோஷமிட்ட மாணவி சோபியா மீது தமிழிசை கொடுத்த புகாரின் அடிப்படையில் 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பின்னர் அவர் கைது செய்யப்பட்டு தூத்துகுடி சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் அவரை ஜாமீனில் விட வேண்டும் என தூத்துகுடி நீதிமன்றத்தில் இன்று காலை மனுதாக்கல் செய்யப்பட்டது

இந்த மனுமீதான தீர்ப்பு இன்று மதியம் 12 மணிக்கு தொடங்கும் என நீதிமன்றம் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் சற்றுமுன் இந்த தீர்ப்பு வெளிவந்தது. அப்போது சோபியாவுக்கு ஜாமீன் வழங்கி தூத்துகுடி நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனையடுத்து இன்னும் சில நிமிடங்களில் சோபியா சிறையில் இருந்து விடுவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

சோபியா கைது விவகாரம் தேசிய அளவில் டிரெண்டாகி பாஜகவுக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ள நிலையில் சோபியாவுக்கு ஜாமீன் கிடைத்துள்ளது.

 

More News

தமிழிசை-சோபியா விவகாரம்: 10 மொழிகளில் டிரெண்ட் ஆகும் ஹேஷ்டேக்குகள்

தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்திரராஜன் பயணம் செய்த விமானத்தில் பயணம் செய்த சோபியா என்ற இளம்பெண் 'பாஸிச பாஜக ஒழிக' என்று கோஷமிட்ட் விவகாரம் தற்போது பூதாகரமாகிவிட்டது

தமிழ் நடிகரின் மனைவி தூக்கில் தொங்கி தற்கொலை: போலீசார் விசாரணை

கடந்த சில மாதங்களாகவே மன அழுத்தம் உள்பட பல்வேறு காரணங்களால் சின்னத்திரை மற்றும் சினிமா நட்சத்திரங்களின் தற்கொலைகள் அதிகரித்து வரும் நிலையில்

எனக்காக மொட்டை அடியுங்கள்: பாலாஜியிடம் வேண்டுகோள் விடுக்கும் நபர்

பிக்பாஸ் வீட்டில் நேற்றைய நாமினேஷன் படலத்தில் ஐஸ்வர்யா, மும்தாஜ், ஜனனி, விஜயலட்சுமி மற்றும் செண்ட்ராயன் ஆகியோர் எவிக்சன் பட்டியலில் உள்ளனர் என்று பார்த்தோம்

எவிக்சன் பட்டியலில் ஐஸ்வர்யா உள்பட ஐவர்: யாஷிகா திட்டம் என்ன?

இந்த வார நாமினேஷன் படலம் நேற்று நடைபெற்றபோது ஐஸ்வர்யா, ஜனனி, மும்தாஜ், செண்ட்ராயன் மற்றும் விஜயலட்சுமி ஆகிய ஐவர் எவிக்சன் பட்டியலில் உள்ளனர்.

தமிழிசை முன் பாஜகவுக்கு எதிராக கோஷமிட்ட இளம்பெண் கைது

நேற்று விமானத்தில் பாஜக தமிழக தலைவர் தமிழிசை செளந்தரராஜன் பயணம் செய்து கொண்டிருந்தபோது விமானத்தில் பயணம் செய்து கொண்டிருந்த சோபியா என்ற இளம்பெண் பாஜகவுக்கு எதிராக கோஷமிட்டார்.