பாஜகவுக்கு எதிராக கோஷமிட்ட சோபியாவுக்கு ஜாமீன்

  • IndiaGlitz, [Tuesday,September 04 2018]

தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்திரராஜன் முன்பு 'பாஸிச பாஜக ஒழிக' என்று கோஷமிட்ட மாணவி சோபியா மீது தமிழிசை கொடுத்த புகாரின் அடிப்படையில் 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பின்னர் அவர் கைது செய்யப்பட்டு தூத்துகுடி சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் அவரை ஜாமீனில் விட வேண்டும் என தூத்துகுடி நீதிமன்றத்தில் இன்று காலை மனுதாக்கல் செய்யப்பட்டது

இந்த மனுமீதான தீர்ப்பு இன்று மதியம் 12 மணிக்கு தொடங்கும் என நீதிமன்றம் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் சற்றுமுன் இந்த தீர்ப்பு வெளிவந்தது. அப்போது சோபியாவுக்கு ஜாமீன் வழங்கி தூத்துகுடி நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனையடுத்து இன்னும் சில நிமிடங்களில் சோபியா சிறையில் இருந்து விடுவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

சோபியா கைது விவகாரம் தேசிய அளவில் டிரெண்டாகி பாஜகவுக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ள நிலையில் சோபியாவுக்கு ஜாமீன் கிடைத்துள்ளது.