தூத்துகுடி துப்பாக்கி சூடு சம்பவம்: ரஜினிக்கு ஆணையம் அதிரடி உத்தரவு
- IndiaGlitz, [Tuesday,February 25 2020]
கடந்த ஆண்டு நடந்த தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து ரஜினி கூறிய கருத்து ஒன்றுக்காக அவரிடம் விசாரணை நடத்த, இந்த சம்பவத்தை விசாரணை செய்துவரும் ஒரு நபர் விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பியது
இந்த நிலையில் தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து விசாரணை ஆணையத்தின் முன் நேரில் ஆஜராவதில் இருந்து தனக்கு விலக்கு வேண்டும் என்றும் தன்னிடம் கேட்க வேண்டிய கேள்விகளை எழுத்துப்பூர்வமாக அளித்தால், தான் எழுத்துப்பூர்வமாக பதில் அளிக்க தயார் என்றும் ரஜினிகாந்த் தரப்பில் இருந்து கோரிக்கை மனு ஒன்று அளிக்கப்பட்டது
இந்த மனு மீதான விசாரணை நேற்று நடைபெற்ற நிலையில் ரஜினியின் கோரிக்கையை ஏற்றுக் கொள்வதாக விசாரணை ஆணையம் அறிவித்துள்ளது. இதனால் விசாரணை ஆணையம் முன் நேரில் ஆஜராவதிலிருந்து ரஜினிகாந்திற்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அவரிடம் கேட்கப்படும் கேள்விகள் அடங்கிய பேப்பர் சீல் வைத்து விசாரணை ஆணையம் அவருடைய வழக்கறிஞரிடம் வழங்கியுள்ளதாகவும் அதனை ரஜினியிடம் வழக்கறிஞர் ஒப்படைக்க உள்ளதாகவும் செய்திகள் வெளியாகிறது
இந்த செய்தியை ரஜினி தரப்பு வழக்கறிஞர் பேட்டி ஒன்றில் உறுதி செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. விசாரணை ஆணையம் கேட்டுள்ள கேள்விகளுக்கு விரைவில் ரஜினி எழுத்து மூலம் பதில் அளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது