திருப்புமுனையாக மாறிய அஸ்வினின் 'மன்கட் ரன் அவுட்' விக்கெட்!
Send us your feedback to audioarticles@vaarta.com
நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதின. இந்த போட்டியில் பஞ்சாப் கொடுத்த 185 என்ற இலக்கை நோக்கி ராஜஸ்தான் அணி விளையாடி வந்தது. இந்த அணியின் பட்லர் மிக அபாரமாக விளையாடி வந்தார். 43 பந்துகளில் 69 ரன்கள் அடித்திருந்த பட்லர் திடீரென அஸ்வினால் ரன் அவுட் செய்யப்பட்டார். அதாவது அஸ்வின் பந்துவீசுவதற்கு முன்னரே பட்லர் க்ரீசை விட்டு வெளியேறியதால் அஸ்வின் ரன் அவுட் செய்தார்.
இந்த ரன் அவுட் பெரும் சர்ச்சைக்குள்ளானது. இந்தவிதமான ரன் அவுட்டுக்கு மன்கட் அவுட் என்று பெயர். அதாவது ஒரு பந்துவீச்சாளர் பந்தை வீசுவதற்கு முன்பாகவே ரன்னர் க்ரீஸை விட்டு வெளியேறினால் ரன் அவுட் செய்யலாம் என்ற விதி உள்ளது. இருப்பினும் பெரும்பாலான பந்துவீச்சாளர்கள் இதுபோன்ற சமயங்களில் பேட்ஸ்மேனை எச்சரிக்கை மட்டுமே செய்துள்ளனர். கடந்த சில வருடங்களுக்கு முன் இலங்கை அணிக்கு எதிராக இந்திய அணி விளையாடியபோது இதே அஸ்வின் இதேபோன்ற ரன் அவுட் ஒன்றை செய்தார். ஆனால் அப்போது கேப்டனாக இருந்த சச்சின் பெருந்தன்மையுடன் அந்த ரன் அவுட் தேவையில்லை என்று அறிவித்தார்.
ஆனால் நேற்றைய பட்லரின் ரன் அவுட் காரணமாக ராஜஸ்தான் அணி நிலைகுலைந்தது. 109 ரன்களுக்கு ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்திருந்த ராஜஸ்தான் இந்த ரன் அவுட்டுக்கு பின் வெறும் 62 ரன்களில் 7 விக்கெட்டுக்களை இழந்தது. இறுதியில் 14 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி தோல்வியும் அடைந்தது
அஸ்வினின் ரன் அவுட் விதியின்படி இருந்தாலும் பட்லரை அவர் சதி செய்து வீழ்த்தியுள்ளதாக பலர் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இருப்பினும் அஸ்வினுக்கு ஆதரவாகவும் கருத்துக்கள் பதிவாகி வருகிறது. மொத்தத்தில் நேற்றைய ரன் அவுட் இனிவரும் பேட்ஸ்மேன்களுக்கு ஒரு பாடமாக அமைந்தது
#JosButtler run out by #Ashwin #AshwinMankads #SpiritOfCricket #IPL2019 #KXIPvRR pic.twitter.com/OWzrmlxCCV
— Imwithnation (@Modi_vs_all) March 26, 2019
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout