திடீரென நாட்டின் பெயரையே மாற்றிய அதிபர்… காரணம் என்ன தெரியுமா?

  • IndiaGlitz, [Tuesday,February 15 2022]

ஐ.நா பொதுசபையால் “துருக்கி“ என அங்கீகரிக்கப்பட்ட பெயரை “துருக்கியே“ என மாற்றியுள்ளார் அந்நாட்டின் அதிபர் ரெசெப் தயிப் எர்டோகன். இதுகுறித்து பேசிய அவர் தங்களது நாட்டின் கலாச்சாரம் மற்றும் நாகரிகத்தை இந்தச் சொல்தான் முழுமையாகப் பிரதிபலிக்கிறது எனவும் கூறியுள்ளார்.

கடந்த காலங்களில் “ஹாலண்ட்“ என்றிருந்த பெயரை “நெதர்லாந்து“ என அந்நாட்டு அமைச்சரவை மாற்றியிருக்கிறது. இதேபோல “மாசிடோனியா“ என்றிருந்த பெயரை க்ரீஸ் நாட்டுடன் இருந்து சிக்கல் காரணமாக “வடக்கு மாசிடோனியா“ என மாற்றிக்கொண்டுள்ளது. மேலும் “பெர்ஷியா“ என்றிருந்த பெயரே தற்போது “ஈரான்” என மாற்றப்பட்டு இருக்கிறது. இப்படி தொடர்ந்து நாடுகளின் பெயர்கள் அவர்களுடைய பண்பாட்டு மற்றும் கலாச்சாரங்களின் பின்னணியில் மாற்றம் செய்யப்படுகின்றன.

இந்நிலையல் துருக்கி அதிபர் எர்டோகன் தன்னுடைய நாட்டின் பெயரை “துருக்கியே“ என மாற்றியிருக்கிறார். மேலும் மேற்கத்திய நாடுகளில் இருந்து விடுதலை பெற்ற துருக்கி முதலில் துருக்கியே என்றுதான் அழைக்கப்பட்டது எனவும் துருக்கி மொழியில் எங்களுடைய நாட்டின் பெயரை நாங்கள் “துருக்கியே“ என்றுதான் கூறுகிறோம். இதுவே பின்னர் உச்சரிப்பிற்குத் தகுந்தவாறு துருக்கி என மாற்றம் பெற்றிருக்கிறது.

இதனால் எங்களுடைய கலாச்சாரத்தையும் நாகரிகத்தையும் சரியாகப் பிரதிபலிக்கும் “துருக்கியே“ என்ற சொல்லையே மீண்டும் எங்களுடைய அடையாளமாக மாற்றிக்கொண்டுள்ளோம் என்று எர்டோகன் விளக்கம் அளித்திருக்கிறார்.