சென்னையில் முதல் சுரங்க மெட்ரோ ரயில் தொடங்கியது

  • IndiaGlitz, [Sunday,May 14 2017]

சென்னையில் திருமங்கலம் முதல் நேரு பூங்கா வரையிலான 7.4 கிலோ மீட்டர் தூர சுரங்கப்பாதையில் அமைக்கப்பட்ட மெட்ரோ ரயில் பயணிகள் சேவை இன்று தொடங்கியது. முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு ஆகியோர் இந்த சுரங்கப்பாதையை திறந்து வைத்தனர். இன்று காலை 10.15 மணிக்கு தொடங்கிய இந்த விழாவில், தமிழக அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

சென்னை போக்குவரத்து நெரிசலை சமாளிக்க 45 கி.மீ தொலைவுக்கு இரண்டு வழித் தடங்களில் மெட்ரோ ரயில் பாதை அமைக்கும் பணி நடந்து வருகிறது. முதல் கட்டமாக கோயம்பேடு முதல் ஆலந்தூர் வரையிலான மெட்ரோ ரயில் சேவை கடந்தாண்டு தொடங்கியது. இதனைத் தொடர்ந்து இரண்டாவது கட்டமாக சின்னமலை- வரை இந்த ரயில் சேவை நீட்டிக்கப்பட்டது.

இந்த நிலையில் இன்று மூன்றாம் கட்டமாக திருமங்கலம் - நேரு பூங்கா இடையே மெட்ரோ ரயில் சேவை தொடங்குகிறது. இந்த ரயில் பாதையில் கீழ்பாக்கம், புது ஆவடி சாலை, ஷெனாய் நகர், அமைந்தகரை, அண்ணா நகர் மற்றும் திருமங்கலம் ஆகிய மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இன்று முதல் இந்த ரயில் பாதை செயல்பாட்டுக்கு வந்துள்ளதால் இனிமெல் இந்த பகுதியில் இருந்த போக்குவரத்து நெரிசல் பெருமளவுக்கு குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.