ராம்ரஹிம் அறையில் உள்ள சுரங்கப்பாதை எங்கே செல்கிறது? திடுக்கிடும் தகவல்
- IndiaGlitz, [Sunday,September 10 2017]
சமீபத்தில் பெண் சீடர் ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்ததாக சாட்டப்பட்ட குற்றச்சாட்டு உறுதியானதால் சாமியார் ராம்ரஹீம் சிங் அவர்களுக்கு நீதிமன்றம் 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கியது என்பது தெரிந்ததே.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக அவரது ஆசிரமத்தில் அமலாக்கத்துறையினர் மற்றும் தடயவியல் அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர். அப்போது ராம் ரஹிம் அறையில் இருந்து ஒரு சுரங்கப்பாதை பெண் சீடர்கள் தங்கியிருந்த ஹாஸ்டலுகு செல்வதை கண்டுபிடித்தனர். இதன்மூலம் பெண் சீடர்களுடன் சாமியார் உல்லாசமாக இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும் இதே சுரங்கத்தில் பட்டாசு தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்று இருந்ததாகவும், இந்த இரண்டையும் அதிகாரிகள் சீல் வைத்து அடைத்ததாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.