அரசுப்பள்ளி மாணவர்களின் கல்விக்கட்டணம்: முதல்வர், முக ஸ்டாலின் போட்டி அறிவிப்பு!
Send us your feedback to audioarticles@vaarta.com
நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா இந்த ஆண்டு தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து 405 அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ கல்லூரியில் படிக்க இடம் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இவர்களில் ஒரு சிலருக்கு தனியார் மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைத்துள்ளதால் அவர்கள் கட்டணம் கட்டுவதில் சிரமம் இருக்கும் என்று கூறப்பட்டது. இதனையடுத்து தனியார் மருத்துவ கல்லூரியில் படிக்க வாய்ப்பு கிடைத்த அரசு பல்ளி மாணவர்களுக்கான கட்டணத்தை அரசே ஏற்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்தன.
இந்த நிலையில் கடந்த சில மணி நேரங்களுக்கு முன்னர் அரசு பள்ளி மாணவர்களின் கல்வி கட்டணத்தை திமுக ஏற்கும் என திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்கள் அறிவித்தார். இந்த அறிவிப்புக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததை அடுத்து சற்றுமுன் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் அதிரடியாக ’தனியார் மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைத்த அரசு பள்ளி மாணவர்களின் கல்வி கட்டணத்தை தமிழக அரசே ஏற்கும் என்று கூறியுள்ளார்.
மேலும் மாணவர்களுக்கு முழு அரசு உதவி கிடைக்கும் என தெரிந்த பின்பும் திமுக உதவுவதாக தெரிவித்திருப்பது அரசியல் நாடகம் என்றும், திமுகவின் அரசியல் நாடகத்தை மக்கள் நன்கு அறிவார்கள் என்றும், கல்வி உதவித்தொகைக்கு அனுமதி வரும்வரை காத்திருக்காமல் உடனடியாக செலுத்த சுழல் நிதியை உருவாக்கவும் உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும் முதல்வர் தெரிவித்துள்ளார்.
முக ஸ்டாலின் அரசு பள்ளி மாணவர்களின் கல்வி கட்டணத்தை திமுக ஏற்கும் என்று கூறிய ஒரு சில மணி நேரங்களில் முதல்வர் அந்த கட்டணத்தை அரசே ஏற்கும் என்று கூறியிருப்பது மட்டுமின்றி, மாணவர்களின் விடுதி கட்டணம் உள்பட அனைத்து செலவுகளையும் அரசே ஏற்கும் என்று கூறியுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout