'துக்ளக் தர்பார்' படத்தின் மாஸ் அப்டேட் கொடுத்த சன் டிவி!

  • IndiaGlitz, [Sunday,January 10 2021]

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, தளபதி விஜய்யுடன் நடித்த ’மாஸ்டர்’ திரைப்படம் வரும் 13ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் ஏற்கனவே அவர் நடித்து முடித்த நான்கு திரைப்படங்கள் ரிலீசுக்கு தயாராக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திரைப்படங்கள் ஒவ்வொன்றாக விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் விஜய் சேதுபதி நடித்து முடித்துள்ள திரைப்படங்களில் ஒன்று ’துக்ளக் தர்பார்’. இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் தற்போது இந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் நாளை மதியம் 12.30 மணிக்கு சன் டிவியின் யூடியூப் சேனலில் ’துக்ளக் தர்பார்’ திரைப்படத்தின் டீசர் வெளியாக உள்ளதாக சன்டிவியின் சமூக வலைதளப் பக்கத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரும் சன் டிவியின் சமூக வலைத்தள பக்கத்தில் தான் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய்சேதுபதி, ராஷிகண்ணா, அதிதிராவ் ஹைத்ரி, பார்த்திபன், மஞ்சிமா மோகன் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை டெல்லிபிரசாத் தீனதயாள் என்பவர் இயக்கியுள்ளார். இந்த படத்திற்கு ’96’ புகழ் கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

அருண்விஜய்யின் 31வது படம் குறித்த முக்கிய அப்டேட்!

அருண் விஜய் நடிப்பில் 'ஈரம்' இயக்குனர் அறிவழகன் இயக்கத்தில் கடந்த 2017ஆம் ஆண்டு வெளிவந்த 'குற்றம் 23' என்ற திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றதை அடுத்து மீண்டும் இருவரும் இணைந்து

கொரோனா தடுப்பூசி போட்டு கொண்ட முதல் நடிகை: ரஜினி பட நடிகைக்கு குவியும் வாழ்த்து!

கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து விடுபட தற்போது இந்தியா உள்பட உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. அந்த வகையில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட முதல் நடிகை

தமிழ் சினிமாவில் வாய்ப்பு தருவதாக கூறி டெல்லி மாடல் அழகிகளை ஏமாற்றிய கும்பல்!

தமிழ் சினிமாவில் வாய்ப்பு தருவதாக கூறி டெல்லியில் இருந்து சென்னைக்கு அழைத்து வரப்பட்ட 2 மாடல் அழகிகள் சென்னையில் உள்ள 5 ஸ்டார் ஹோட்டலில் மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

கமல் கேள்விக்கு பதில் சொல்ல மறுக்கும் ஆரி உள்பட 4 போட்டியாளர்கள்!

பிக்பாஸ் நிகழ்ச்சியை பொருத்தவரை கமல் எந்த கேள்வி கேட்டாலும் அதற்கு உடனடியாக பதில் சொல்லும் போட்டியாளர்கள் இன்று அவர் கேட்ட ஒரு கேள்விக்கு பதில் சொல்லாமல் மௌனமாக இருப்பது

திடீர் திருமணத்திற்கு காரணம் என்ன? மனம் திறந்த ஆனந்தி!

பிரபுசாலமன் இயக்கிய 'கயல்' என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகி அதன் பின்னர் 'சண்டிவீரன்' 'பொறியாளன்' 'த்ரிஷா இல்லைனா நயன்தாரா' 'விசாரணை' 'பரியேறும் பெருமாள்'