ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் டிடிவி தினகரன் வெற்றி: ஜெ.வை விட அதிக வாக்கு வித்தியாசம்
Send us your feedback to audioarticles@vaarta.com
சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் பதிவான ஓட்டுக்கள் இன்று காலை 8 மணிக்கு எண்ண தொடங்கிய நிலையில் முதல் சுற்றில் இருந்தே சுயேட்சை வேட்பாளர் டிடிவி தினகரன் முன்னிலை வகித்து வந்தார். இந்த நிலையில் சற்றுமுன் 19 சுற்றுகளும் எண்ணி முடிக்கப்பட்ட நிலையில் டிடிவி தினகரன் 89013 வாக்குகள் பெற்று பெற்றார். இவரை அடுத்து அதிமுக வேட்பாளர் மதுசூதனன் 48,306 வாக்குகள் பெற்றார். தினகரன் 40707 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
கடந்த 2016ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ஜெயலலிதா 39545 வாக்குகள் வித்தியாசத்தில் மட்டுமே வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தமிழக இடைத்தேர்தல் வரலாற்றில் ஒரு சுயேட்சை வேட்பாளர் இவ்வளவு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெருவது இதுவே முதல்முறை
இந்த தேர்தலில் திமுக வேட்பாளர் மருதுகணேஷ் 24651 வாக்குகள் பெற்று மூன்றாமிடத்திற்கு தள்ளப்பட்டார். நாம் தமிழர் கட்சியின் கலைக்கோட்டுதயம் 3860 வாக்குகளும், பாஜகவின் கரு.நாகராஜன் 1417 வாக்குகளும் கிடைத்துள்ளது. நோட்டாவுக்கு 2373 வாக்குகள் கிடைத்துள்ளது. நோட்டாவுக்கு கிடைத்த வாக்குகள் மத்தியில் ஆளும் பாஜக பெற்ற வாக்குகளை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் மதுசூதனன் தவிர திமுக வேட்பாளர் உள்பட அனைத்து வேட்பாளர்களும் டெபாசிட் இழந்தனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments