நன்றி தெரிவித்த தினகரனுக்கு அதிர்ச்சி பதிலளித்த சுப்பிரமணியன் சுவாமி
Send us your feedback to audioarticles@vaarta.com
நடைபெற்று முடிந்த ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்டு 50 ஆண்டுகளாக தமிழகத்தை ஆட்சி செய்த திராவிட இயக்கங்களை டிடிவி தினகரன் தோற்கடித்தார். தினகரனின் இந்த வெற்றி பலருக்கு அதிர்ச்சியையும் சிலருக்கு ஆனந்ததையும் ஏற்படுத்தியுள்ளது
இந்த நிலையில் தனக்கு வாழ்த்து தெரிவித்தவர்களுக்கு தினகரன் தனது டுவிட்டரில் மூலம் நன்றி தெரிவித்து வந்தார். பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களுள் ஒருவரான சுப்ரமணியன் சுவாமி, தேர்தலுக்கு முன்பே தினகரன் தான் வெற்றி பெறுவார் என்று கூறியதோடு அவருக்கு அட்வான்ஸ் வாழ்த்துக்களையும் தெரிவித்திருந்தார்
இந்த நிலையில் தனக்கு வாழ்த்து தெரிவித்த சுப்பிரமணியன் சுவாமிக்கு தினகரன் நன்றி தெரிவித்தார். அவருடைய வாழ்த்துக்கு பதில் கூறிய சுப்பிரமணியன் சுவாமி, 'All Thevars are strong Hindu' என்று பதிலளித்துள்ளார். சுவாமியின் இந்த பதில் பலரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com