ஆன்மீக அரசியல் தவறாகவே முடியும்: டிடிவி தினகரன்

  • IndiaGlitz, [Tuesday,January 02 2018]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தனது அரசியல் வருகை குறித்த அறிவிப்பின்போது தான் ஆன்மீக அரசியலை பின்பற்றவுள்ளதாக தெரிவித்தார். மேலும் ஆன்மீக அரசியல் என்றால் உண்மையான, நேர்மையான, நாணயமான சாதி, மத, சார்பற்ற அறவழி அரசியலே ஆன்மீக அரசியல் என அவர் விளக்கமளித்தார். மேலும் ஆன்மீகம் என்பது ஆத்மாவுடன் தொடர்புடையது என்றும் விளக்கமளித்தார்

இந்த நிலையில் இதுவரை எந்த ஒரு அரசியல்வாதியும் கேள்விப்படாத ஆன்மீக அரசியல் குறித்து பலர் பலவிதமான கருத்துக்களை கூறி வருகின்றனர். அந்த வகையில் சமீபத்தில் ஆர்.கே.நகரில் நடைபெற்ற இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற டிடிவி தினகரன் ஆன்மீக அரசியல் குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

ஆன்மீக அரசியல் குறித்து டிடிவி தினகரன் கூறியதாவது: 'ஆன்மீகம் என்பது தனி மனிதனை ஒழுங்குபடுத்தவே; அரசியலில் பயன்படுத்தினால் அது தவறாகத்தான் முடியும். மேலும் எதையும் கண்மூடித்தனமாக எதிர்க்கும் குணம் என்னுடைய குணம் அல்ல, என்னை பொருத்தவரையில் ஆன்மீக அரசியல் தவறாகவே முடியும்' என்று தினகரன் கூறியுள்ளார்.

More News

தமிழகத்தில் தான் மிகப்பெரிய புரட்சிகள் தொடங்கியுள்ளது: ரஜினிகாந்த்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடந்த 31ஆம் தேதி அரசியல் வருகை குறித்த அறிவிப்பை வெளியிட்ட நிலையில் இன்று சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்தார். இந்த சந்திப்பில் அவர் பேசியதாவது:

பலூன் ஹிட் படம்தான். ஆனால் எனக்கு மகிழ்ச்சியில்லை. இயக்குனர் சினிஷ்

பலூன் பட வெற்றியால் தயாரிப்பாளருக்கு மகிழ்ச்சி. ஆனால் தனிப்பட்ட முறையில் என்னால் இந்த வெற்றியை கொண்டாட முடியவில்லை.

எம்.எஸ்.பாஸ்கருக்கு சர்ப்ரைஸ் புத்தாண்டு பரிசு கொடுத்த மகள்: ஒரு நெகிழ்ச்சியான வீடியோ

தமிழ் திரையுலகில் டப்பிங் கலைஞராக அறிமுகமாகி பின்னர் காமெடி மற்றும் குணசித்திர கேரக்டர்களில் நடித்து வருபவர் எம்.எஸ்.பாஸ்கர். இவருடைய மகள் ஐஸ்வர்யாவும் தற்போது டப்பிங் கலைஞராக உள்ளார்.

பொங்கல் ரேஸில் எத்தனை படங்கள்?

கடந்த 2017ஆம் ஆண்டு பொங்கல் தினத்தில் விஜய்யின் 'பைரவா' மற்றும் பார்த்திபனின் 'கோடிட்ட இடங்களை நிரப்புக' ஆகிய இரண்டு படங்கள் மட்டுமே ரிலீஸ் ஆனது.

ஆன்மீக அரசியல் என்றால் என்ன? ரஜினிகாந்த் விளக்கம்

உண்மையான, நேர்மையான, நாணயமான சாதி, மத, சார்பற்ற அறவழி அரசியலே ஆன்மீக அரசியல்: ரஜினிகாந்த்