குழந்தைக்கு 'அஜித்' என்று பெயர் வைத்த டிடிவி தினகரன்

தேர்தல் பிரச்சாரத்திற்கு அரசியல் தலைவர்கள் செல்லும்போது தொண்டர்கள் சிலர் தங்கள் குழந்தைக்கு பெயர் வைக்க சொல்வது வழக்கம். சிலர் ஒரு வயது, இரண்டு வயது குழந்தைக்கு கூட பெயர் வைக்க சொல்வதும், என்ன குழந்தை என்று கூட தெரியாமல் ஆண் குழந்தைக்கு ஜெயலலிதா என்ற பெயர் வைத்த கூத்தும் சமீபத்தில் நடந்தது.

இந்த நிலையில் அமமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் இருந்தபோது ஒரு தொண்டர் தனது குழந்தைக்கு பெயர் வைக்குமாறு கேட்டு கொண்டார். உடனே என்ன குழந்தை என்று கேட்ட தினகரன், ஆண் குழந்தை என பதில் வந்ததும் உடனே குழந்தைக்கு 'அஜித்' என்று பெயர் வைத்தார். அவர் இந்த பெயரை கூறியதும் அங்கிருந்த கூட்டத்தினர் கோஷம் எழுப்பி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

இதுகுறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அஜித் ரசிகர்கள் இந்த வீடியோவை அதிகளவில் ஷேர் செய்து வருகின்றனர்.

More News

ராகுல்காந்தியை எதிர்த்து சரிதா நாயர்: பரபரப்பாகும் வயநாடு தொகுதி

அமேதி தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, கேரளாவில் உள்ள வயநாடு தொகுதியிலும் போட்டியிட போவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் மனைவி காலமானார்.

காலத்தால் அழியாத பாடல்களான கொக்கரக் கொக்கரக்கோ சேவலே, துணிந்தால் துன்பமில்லை, என்னருமை காதலிக்கு வெண்ணிலவே, வாடிக்கை மறந்ததும் ஏனோ, .சின்னப்பயலே...

சிவாஜி கணேசனுக்கு மரியாதை செய்த அமிதாப்பச்சன்

பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் நடிக்கும் முதல் தமிழ்ப்படமான 'உயர்ந்த மனிதன்' என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருவது தெரிந்ததே

தோல்விகள் காணாத வீரனே இல்லை: சிஎஸ்கே தோல்வி குறித்து ஹர்பஜன்சிங்

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் நேற்றைய ஆட்டத்தில் சென்னை அணி முதல் தோல்வியை சந்தித்தது. முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி, ஹர்திக் பட்டேலின் ஆக்ரோஷமான பேட்டிங்

சிவகார்த்திகேயன் கேட்ட முதல் கேள்வி: 'Mr.லோக்கல்' அனுபவம் குறித்து எம்.ராஜேஷ்

சிவகார்த்திகேயன், நயன்தாரா நடிப்பில் இயக்குனர் எம்.ராஜேஷ் இயக்கி முடித்துள்ள ''Mr.லோக்கல்'' திரைப்படம் வரும் மே 1ஆம் தேதி வெளிவரவுள்ள நிலையில்