டிடிவி தினகரன் மகளுக்கு நிச்சயதார்த்தம்: காங்கிரஸ் பிரமுகர் மகனை மணக்கிறார்!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழக அரசியலில் ஜெயலலிதாவின் மறைவிற்குப் பின்னர் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருபவர் டிடிவி தினகரன். இருபெரும் திராவிட கட்சிகளான அதிமுக, திமுக போன்ற பெரிய கட்சிகளையே எதிர்த்து சுயேச்சையாக ஆர்கே நகர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்டு வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் டிடிவி தினகரனின் மகளுக்கும் காங்கிரஸ் பிரமுகர் ஒருவரின் மகனுக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டிடிவி தினகரன் மகள் ஜெயஹரினிக்கும், காங்கிரஸ் பிரமுகர் கிருஷ்ணசாமி வாண்டையார் அவர்களின் மகன் ராமநாதன் வாண்டையார் அவர்களுக்கும் சமீபத்தில் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இந்த நிச்சயதார்த்த நிகழ்ச்சி புதுவையில் உள்ள டிடிவி தினகரன் வீட்டில் நடந்தது என்பதும் இது குறித்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் இருக்கும் சசிகலா, சிறையில் இருந்தபடியே இந்த திருமணத்தை ஏற்பாடு செய்தார் என்றும், அவர் சிறையிலிருந்து விடுதலையான உடன் அவரது தலைமையில் இந்த திருமணம் நடைபெறும் என்றும் கூறப்படுகிறது. ஏற்கனவே காங்கிரஸ் கட்சியுடன் இணக்கமாக இருப்பதாக டிடிவி தினகரன் மீது ஒரு கருத்து இருந்து வரும் நிலையில், தற்போது காங்கிரஸ் கட்சி பிரமுகருடன் சம்பந்தமும் செய்யவிருப்பதால், வரும் சட்டமன்ற தேர்தலில் அவரது அமமுக கட்சி காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி சேருமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com