உலக மாமேதை ஜெயக்குமாருக்கு பதில் சொல்லும் தகுதி எனக்கு இல்லை. டிடிவி தினகரன்

  • IndiaGlitz, [Monday,June 05 2017]

அதிமுக அம்மா அணியின் துணைப்பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் சமீபத்தில் ஜாமீன் பெற்று சென்னை திரும்பினார். அவருக்கு மேள தாளத்துடன் தொண்டர்கள் உற்சாக வரவேற்பளித்தனர். இந்த நிலையில் அதிமுகவில் இருந்து தன்னை நீக்கும் அதிகாரம் சசிகலாவை தவிர வேறு யாருக்கும் இல்லை என்றும், கட்சிப்பணியில் தொடர்ந்து ஈடுபட போவதாகவும் அறிவித்தார்.
சசிகலா குடும்பத்தினர்களை ஒதுக்கி வைத்துவிட்டு அரசியல் மற்றும் ஆட்சியை தொடர நினைத்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உள்பட மூத்த அமைச்சர்களுக்கு இந்த அறிவிப்பு தர்மசங்கடத்தை கொடுத்தது. இந்த நிலையில் இன்று சசிகலாவை சந்திக்க பெங்களூக்கு கிளம்பினார் டிடிவி தினகரன்
அப்போது செய்தியாளர்கள் அவரிடம் 'நமது எம்.ஜி.ஆர் நாளிதழில் வரும் கருத்துக்கும் அதிமுகவின் கருத்துக்கும் சம்பந்தமில்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியது குறித்து உங்கள் கருத்து என்ன என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் கூறிய டிடிவி தினகரன், 'ஜெயக்குமார் உலக மேதைகளில் ஒருவர். அவர் சொல்லும் கருத்துக்கு பதில் சொல்லும் அளவிற்கு எனக்கு தகுதி இருப்பதாக நான் நினைக்கவில்லை. அவருடைய கருத்துக்கு அவர் உயரத்தில் உள்ள ஒருவர் பதில் சொன்னால்தான் பொருத்தமாக இருக்கும் என்று கூறினார்.
ஜெயக்குமார் குறித்து டிடிவி தினகரன் கூறிய இந்த கருத்து ஜெயகுமாரை புகழ்வதற்காக கூறப்பட்டதா? அல்லது கிண்டலுக்கு கூறப்பட்டதா? அல்லது வஞ்சப்புகழ்ச்சியா? என்பதை ஊகிக்கும் பொறுப்பை வாசகர்களிடமே விட்டுவிடுகிறோம். உங்களுடைய கருத்தை கமெண்ட் பாக்ஸில் தெரிவிக்கவும்.

More News

இந்தியா-பாகிஸ்தான் போட்டி: ஆட்டநாயகர்கள் விருதினை பெற்ற காதல் ஜோடி

ஒவ்வொரு முறையும் இந்தியா-பாகிஸ்தான் போட்டி நடைபெறும்போது இருநாட்டு ரசிகர்களும் போட்டியை போட்டியாக பார்ப்பதில்லை. இரு நாடுகளுக்கும் இடையிலான போர் போலத்தான் பார்ப்பதுண்டு...

எதுவாக இருந்தாலும் என்னை நேரடியாக தொடர்பு கொள்ளுங்கள். வனமகன் நாயகி சாயிஷா

ஜெயம் ரவி நடித்த 'வனமகன்' திரைபடம் இம்மாதம் 23ஆம் தேதி வெளிவரவுள்ளது. இந்த படத்தின் டிரைலருக்கு கிடைத்த மாபெரும் வரவேற்பு காரணமாக இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது...

கொலை வழக்கில் சிக்கினாரா தங்கமகன் மாரியப்பன்?

பாரா ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்று இந்தியாவுக்கே பெருமை சேர்த்தவர் மாரியப்பன். இவருக்கு இந்தியா முழுவதிலும் இருந்து பாராட்டுக்களும் பரிசுகளும் குவிந்த நிலையில் தற்போது இவர் மீது கொலை முயற்சி புகார் ஒன்று காவல்நிலையத்தில் அளிக்கப்பட்டுள்ளது...

முதல்வர் தனது பியூனுக்கு மட்டுமே கட்டளையிட முடியும். நாஞ்சில் சம்பத்

இரட்டை இலையை கையகப்படுத்த லஞ்சம் கொடுக்க முயற்சித்தாக கைது செய்யப்பட்டு திகார் சிறையில் இருந்த டிடிவி தினகரன், சமீபத்தில் ஜாமீன் பெற்று சென்னை திரும்பியுள்ளார்...

என்.டி.டி.வி பிரணாய்ராய் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் திடீர் ரெய்டு

இந்தியாவின் முன்னணி ஊடகங்களில் ஒன்றான என்.டி.டி.வி-யின் துணை நிறுவனர் பிரணாய்ராய் வீட்டில் இன்று காலை முதல் அதிரடியாக சிபிஐ சோதனை செய்து வருகிறது. இதுகுறித்த தகவல் அறிந்தவுடன் இந்தியாவின் முன்னணி ஊடகங்களின் நிருபர்கள் பிரணாய்ராய் வீட்டில் குவிந்துள்ளதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது...