தினகரனின் குக்கர் சின்னத்திற்கு ஆப்பு வைத்த சுப்ரீம் கோர்ட்
- IndiaGlitz, [Wednesday,March 28 2018]
அதிமுகவின் தனி அணியாக செயல்பட்டு வந்த டிடிவி தினகரன், சமீபத்தில் நடந்த ஆர்.கே.நகர் சட்டமன்ற இடைத்தேர்தலில் குக்கர் சின்னத்தில் சுயேட்சையாக போட்டியிட்டு அதிமுக, திமுக ஆகிய இரண்டு திராவிட கட்சிகளையும் தோற்கடித்தார். இந்த நிலையில் தனக்கு ராசியான இந்த குக்கர் சின்னத்தை நிரந்தரமாக பெற வேண்டி அவர் டெல்லி ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த டெல்லி ஐகோர்ட், தினகரனுக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்குமாறு தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டது.
இந்த நிலையில் தினகரனுக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்கியது எதிர்த்து அதிமுக தரப்பில் இருந்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை முடிந்து இன்று தீர்ப்பு அளித்த சுப்ரீம் கோர்ட், தினகரனுக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்கி தரவேண்டும் என்ற டெல்லி ஐகோர்ட்டின் தீர்ப்புக்கு இடைக்கால தடை விதித்துள்ளது.
மேலும் இந்த வழக்கை டெல்லி நீதிமன்றத்தில் 2 நீதிபதிகள் அமர்வு விசாரிக்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த இடைக்கால உத்தரவால் வரும் உள்ளாட்சி தேர்தலில் தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர்கள் குக்கர் சின்னத்தை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது