ஒருபக்கம் விபூதி, இன்னொரு பக்கம் குங்குமம். தமிழக அரசியலில் ஆன்மீகம்

  • IndiaGlitz, [Tuesday,March 14 2017]

முன்னாள் முதல்வர் மறைந்த ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, தனியாக பேரவை ஒன்றை ஆரம்பித்து அரசியலில் சமீபத்தில் நுழைந்துள்ளார் என்பது அனைவரும் அறிந்ததே. ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடவுள்ள அவர் சமீபத்தில் ஜெயலலிதாவின் சமாதியில் சுமார் 45 நிமிடங்கள் தியானம் செய்தார். தியானம் செய்த தீபாவிடம் ஒரு மாற்றம் இருந்ததை கண்டு அனைவரும் ஆச்சரியம் அடைந்தனர். அதுதான் குங்குமப்பொட்டு. இதுவரை வெற்று நெற்றியுடன் வலம் வந்து பெண்களின் அதிருப்திக்கு ஆளாகியிருந்த தீபா, வாக்காளர்களை கவரவே மங்களகரமாக குங்குமத்துடன் காணப்படுவதாக கூறப்பட்டது.
தீபாவின் நிலை இப்படியென்றால் முதல்வர் எடப்பாடி பழநிச்சாமியின் நிலை வேறு. முதலமைச்சர் பதவியேற்றது முதல் நெற்றி நிறைய விபூதியுடன் வலம் வந்த முதல்வர் பழநிச்சாமி கடந்த சில தினங்களாக வெற்று நெற்றியுடன் காணப்படுகிறார். முதல்வர் பதவியேற்றவுடன் அவர் தனது குலதெய்வ கோவிலுக்கு சென்று பூஜை செய்ததாகவும், முதல்வர் பதவியில் நீடித்து இருக்க வேண்டும் என்பதற்காக குலதெய்வத்திடம் சிறப்பு பூஜை செய்யப்பட்ட விபூதியை அவர் தினமும் பூசி வருவதாகவும் அதிமுக தலைமையிடம் யாரோ பற்ற வைத்துவிட்டார்களாம்
இதனால் அதிமுக தலைமையிடம் இருந்து இனிமேல் விபூதி வைக்கக்கூடாது என்று கட்டளை வந்ததாகவும், அதன் காரணமாகத்தான் அவர் சில நாட்களாக வெற்றி நெற்றியுடன் வலம்வருவதாகவும் கூறப்படுகிறது. இது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. ஆனால் பிரேக்கிங் நியூஸ் இல்லாமல் வாடி வதங்கியுள்ள நெட்டிஸன்களுக்கு இந்த செய்தி வரப்பிரசாதமாக கிடைத்துள்ளது., இதுகுறித்த கிண்டல் பதிவுகள் சமூக வலைத்தளங்களில் டிரெண்ட் ஆகி வருகிறது.

More News

நடிக்க வாய்ப்பு கேட்ட பெண்ணிடம் சில்மிஷம். பிரபல தயாரிப்பாளர் கைது

நடிகர், நடிகைகளின் ஆடம்பரமான வெளிப்புற பகட்டை நம்பி திரையுலகில் நாமும் சாதிக்கலாம் என்று நாள்தோறும் புதிய முகங்கள் திரையுலகில் நுழைய முயற்சித்து வருகின்றனர்.

சரியான நேரத்தில் ஆரம்பமாகும் 'போஸ்டல் வங்கி'

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பணமதிப்பு பிரச்சனை ஏற்பட்டபோது வங்கி வாடிக்கையாளர்கள் பட்ட கஷ்டங்கள் கொஞ்சமல்ல. நம்முடைய கணக்கில் இருந்த பணத்தை எடுக்க பல கண்டிஷன்கள்.

ஆரம்ப விலை ரூ.50 கோடி. அஜித் படத்தின் அமோக வியாபாரம்

தல அஜித் நடித்து வரும் 'விவேகம்' படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு இன்னும் ஒருசில நாட்களில் பல்கேரியாவில் தொடங்கவிருப்பதால் இந்த படத்தின் வியாபாரம் குறித்த பேச்சுவார்த்தையையும் தயாரிப்பு நிறுவனம் தொடங்கிவிட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளது

அருண்விஜய்யுடன் மீண்டும் கூட்டணி சேரும் பிரபல இயக்குனர்

சமீபத்தில் வெளியான அருண்விஜய்யின் 'குற்றம் 23' என்ற மெடிக்கல் க்ரைம் திரைப்படம் தமிழகம் முழுவதும் மாபெரும் வெற்றியை பெற்றுள்ளது.

ஆளுங்கட்சி ஊடகங்களில் முதல்வர் பெயர் இருட்டடிப்பா?

பொதுவாக ஆளுங்கட்சி ஊடகம் என்றாலே அரசுக்கு ஜால்ரா போடும் வகையிலும், முதல்வரின் பெருமைகளை பறைசாற்றும் விதமாகத்தான் இருக்கும்.