ஆர்.கே.நகர் தேர்தல் ரத்து: கூட்டுச்சதி என டிடிவி தினகரன் கண்டனம்

  • IndiaGlitz, [Monday,April 10 2017]

ஆர்.கே.நகரில் வாக்காளர்களுக்கு மிக அதிகமான அளவில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா நடந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்ததால் தேர்தலை அதிரடியாக தேர்தல் ஆணையம் ரத்து செய்தது. இதுகுறித்து அரசியல் தலைவர்கள் தெரிவித்துள்ள கருத்துக்களை பார்ப்போம்;

அதிமுக அம்மா வேட்பாளர் தினகரன்: 'பாரதிய ஜனதா, வருமானவரித்துறை, தேர்தல் ஆணையத்தின் கூட்டுத் சதியால் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது. தொகுதிக்கு சென்று மக்களை சந்தித்து இதற்கு நியாயம் கேட்போம். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை ரத்து செய்தது ஜனநாயகப் படுகொலை

முத்தரசன்: மீண்டும் தேர்தல் நடத்தினால் பணப்பட்டுவாடா மீண்டும் நடைபெறாது என்பதற்கு என்ன உத்தரவாதம். திமுக வெற்றிபெறும் என கருத்துகணிப்பு வந்த நிலையில் தேர்தலை ரத்து செய்தது சரியல்ல

திருநாவுக்கரசர்: ஆர்.கே. நகர் தேர்தல் தள்ளி வைக்கப்பட்டதால் எந்தவொரு பயனும் இல்லை. மீண்டும் தேர்தல் வைத்தால் இருமடங்கு பணப்புழக்கம் இருக்கும்

ஓ.பன்னீர்செல்வம்: ஆர்.கே நகரில் தேர்தல் நடக்க வேண்டும் என்பதே எங்கள் நிலைப்பாடு

தீபா: தேர்தலில் ரத்துசெய்து பயன் இல்லை, பணத்தால் தேர்தலில் வெற்றி பெற நினைக்கும் வேட்பாளரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்

தமிழிசை செளந்திரராஜன்: தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பு வரவேற்கதக்கது. குறிப்பாக நேர்மயைாக தேர்தல் நடத்தும் சூழ்நிலையில் வரும் போது தேர்தல் நடத்தப்படும் என அறிவித்திருப்பது, மீண்டும் தேர்தல் நடந்தால் பணப்பட்டுவாடா நடக்கும் என கூறியவர்களுக்கு பதிலடி

ப.சிதம்பரம்: ஆர்.கே.நகரில் பட்டுவாடா செய்யப்பட்டது முறையான பணமா?