திமுகவின் பி-டீமா டிடிவி தினகரன்… தொடரும் சர்ச்சை விளம்பரங்கள்!
Send us your feedback to audioarticles@vaarta.com
மறைந்த முதல்வர் செல்வி ஜெயலலிதாவின் தோழி சசிகலாவை பின்பற்றி அரசியலுக்குள் காலடி எடுத்து வைத்தவர் டிடிவி தினகரன். தற்போது அமமுக கட்சியின் தலைவராகவும் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் அரசியலில் இருந்து விலகுவதாக சசிகலா அறிவித்ததோடு, கழகத்தின் ஆட்சி தொடர வேண்டும் என விரும்புவதாகக் கூறி தற்போது அரசியலில் இருந்து விலகி இருக்கிறார் திருமதி சசிகலா.
திருமதி சசிகலா தனது அரசியல் நிலைப்பாட்டை தெரிவித்தப் பின்பும் டிடிவி தினகரன் அவர்கள் தமழகத்தின் அனைத்து தொகுதிகளிலும் தேமுதிக கட்சியோடு கூட்டணி வைத்து தற்போது தேர்தல் களத்தில் குதித்து இருக்கிறார். தனது நிலைப்பாடு குறித்து விளக்கம் அளித்த தினகரன் தனது செயலுக்கும் சசிகலாவின் தேர்தல் விலகல் அறிவிப்புக்கும் எந்த சம்பந்தமும் இல்லை எனக் கூறி தற்போது தேர்தலில் கவனம் செலுத்தி வருகிறார்.
இப்படி தேர்தல் பணியாற்றி வரும் டிடிவி தினகரன் வெளியிடும் விளம்பரங்கள் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கின்றன. காரணம் அமமுக வெளியிடும் அனைத்து விளம்பரங்கள் அனைத்தும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை மிகக் கடுமையாக விமர்சனம் செய்து இருக்கிறது. இந்த விமர்சனத்தால் டிடிவி தினகரன் என்ன செய்து கொண்டு இருக்கிறார்? ஒருவேளை திமுகவின் வெற்றிக்காக மறைமுகமாக செயல்பட்டு கொண்டு இருக்கிறாரா? என்ற விமர்சனத்தையும் சில அரசியல் நோக்கர்கள் வெளியிட்டு வருகின்றனர்.
மேலும் அமமுக வெளியிடும் அனைத்து விளம்பரங்களிலும் தமிழக முதல்வர் மட்டுமே விமர்சிக்கப் படுகிறார். வேறு அதிமுக தலைவர்களையோ அல்லது கட்சியையோ அந்த விளம்பரங்கள் விமர்சிக்க வில்லை. இதனால் திமுகவிற்கு சாதகமாக செயல்பட வேண்டும் என்ற நோக்கில் இப்படி டிடிவி தினகரன் நடந்து கொள்கிறாரா? என்ற கேள்வியையும் சிலர் எழுப்பி வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com