சசிகலா வழக்கு தீர்ப்பு எதிரொலி: ஈசிஆரில் போக்குவரத்து திடீர் நிறுத்தம்

  • IndiaGlitz, [Tuesday,February 14 2017]

அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா உள்பட மூவர் சம்பந்தப்பட்ட சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு இன்று காலை 10.30 அறிவிக்கப்படவுள்ளதாக சுப்ரீம் கோர்ட் உறுதி செய்துள்ளது. இதன் காரணமாக இன்று அதிகாலை முதலே போயஸ் தோட்டம் உள்பட சென்னையின் முக்கிய பகுதிகளில் காவல்துறையின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

தீர்ப்பு சசிகலாவுக்கு பாதகமாக வந்தால் வன்முறை நிகழ வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் ஏற்கனவே தமிழகம் முழுவதிலும் ரெளடிகள் முன்னெச்சரிக்கையாக கைது செய்யப்பட்டிருந்தாலும், சமூக விரோதிகளின் வன்செயலை தடுப்பதற்காகவே பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் சசிகலா தற்போது ஈசிஆரில் உள்ள கூவத்தூர் ரிசார்ட்டில் தங்கியுள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஈசிஆர் என்று கூறப்படும் கிழக்குக் கடற்கரைச் சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதாக செய்திகள் வந்துள்ளது. அரசுப் பேருந்துகள் மட்டுமே அந்த சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், தனியார் கார் உள்ளிட்ட வாகனங்களை போலீஸார் தீவிர சோதனைக்கு பின்னரே அனுமதிப்பதாகவும் கூறப்படுகிறது. ஈசிஆர் சாலையில் சென்னை- புதுச்சேரி இடையே அரசுப் பேருந்துகள் மட்டுமே அனுமதிக்கப்படுகிறது.

More News

ஓபிஎஸ் அணியில் மேலும் ஒரு எம்.எல்.ஏ-எம்பி. மொத்த எண்ணிக்கை 8-12 ஆனது

தமிழக முதல்வர் ஓபிஎஸ் அவர்கள் கடந்த வாரம் ஜெயலலிதா நினைவகத்தில் அரை மணி நேரம் செய்த தியானம், தமிழக அரசியலில் பெரும் புயலை கிளப்பிவிட்டது

நீதியில் நியாயமும் கலந்திருத்தல் வேண்டும். தீர்ப்பு குறித்து கமல்ஹாசன்

ஜெயலலிதா, சசிகலா உள்பட நால்வர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு இன்னும் சற்று நேரத்தில் வெளிவரவுள்ள் நிலையில் இந்த தீர்ப்பு எப்படி இருக்கும் என்பதை அறிய தமிழக மக்கள் மட்டுமின்றி நாடே ஆவலுடன் எதிர்ப்பார்த்து காத்திருக்கின்றது.

இன்னும் சற்று நேரத்தில் முதல்வர் ஓபிஎஸ்-ராகரா லாரன்ஸ் சந்திப்பு

தமிழகத்தில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பத்திற்கு என்று விடை கிடைக்கும் என்று தமிழக மக்கள் அனைவரும் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில் இரு அணிகளாக பிரிந்திருக்கும் அதிமுக தலைவர்கள் சசிகலாவுக்கும், தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களுக்கும் பலர் தங்களுடைய ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.

நாளை தீர்ப்பு உறுதி. அதிகாரபூர்வமான தகவல்

சசிகலா மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு நாளை வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நாளை காலை 10.30 தீர்ப்பு வெளிவரவுள்ளது தற்போது உறுதியாகியுள்ளது...

ஆளுனருக்கு மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் கூறிய அதிரடி யோசனை

தமிழகத்தில் நிலவி வரும் அரசியல் குழப்பங்களுக்கு தீர்வு காணக்கூடிய இடத்தில் இருக்கும் ஒரே நபரான தமிழக பொறுப்பு கவர்னர் வித்யாசாகர் ராவ் விரைவில் தனது முடிவை அறிவிக்க உள்ளதாக கூறப்படுகிறது...