சசிகலா வழக்கு தீர்ப்பு எதிரொலி: ஈசிஆரில் போக்குவரத்து திடீர் நிறுத்தம்
Send us your feedback to audioarticles@vaarta.com
அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா உள்பட மூவர் சம்பந்தப்பட்ட சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு இன்று காலை 10.30 அறிவிக்கப்படவுள்ளதாக சுப்ரீம் கோர்ட் உறுதி செய்துள்ளது. இதன் காரணமாக இன்று அதிகாலை முதலே போயஸ் தோட்டம் உள்பட சென்னையின் முக்கிய பகுதிகளில் காவல்துறையின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
தீர்ப்பு சசிகலாவுக்கு பாதகமாக வந்தால் வன்முறை நிகழ வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் ஏற்கனவே தமிழகம் முழுவதிலும் ரெளடிகள் முன்னெச்சரிக்கையாக கைது செய்யப்பட்டிருந்தாலும், சமூக விரோதிகளின் வன்செயலை தடுப்பதற்காகவே பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் சசிகலா தற்போது ஈசிஆரில் உள்ள கூவத்தூர் ரிசார்ட்டில் தங்கியுள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஈசிஆர் என்று கூறப்படும் கிழக்குக் கடற்கரைச் சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதாக செய்திகள் வந்துள்ளது. அரசுப் பேருந்துகள் மட்டுமே அந்த சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், தனியார் கார் உள்ளிட்ட வாகனங்களை போலீஸார் தீவிர சோதனைக்கு பின்னரே அனுமதிப்பதாகவும் கூறப்படுகிறது. ஈசிஆர் சாலையில் சென்னை- புதுச்சேரி இடையே அரசுப் பேருந்துகள் மட்டுமே அனுமதிக்கப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout