தற்கொலை முடிவில் டிடிஎப் வாசன்? அவரே வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ..!

  • IndiaGlitz, [Friday,July 07 2023]

யூடியூப் மூலம் பிரபலமான டிடிஎப் வாசன் ’நான் தற்கொலை செய்து கொண்டதாக செய்தி வெளியானால் யாரும் நம்ப வேண்டாம் என்றும் அது கொலை என்று புரிந்து கொள்ளுங்கள்’ என்றும் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சமீபத்தில் டிடிஎஃப் வாசன் சென்ற கார் விபத்துக்குள்ளாகியது என்றும் இந்த விபத்தில் காருக்கு முன் பைக்கில் சென்ற நபர் படுகாயம் அடைந்ததாகவும் செய்திகள் வெளியானது. அதற்கு முன்பு அவர் ’மஞ்சள் வீரன்’ என்ற படத்தில் கதாநாயகனாக நடிப்பதாக அறிவிப்பு வந்தது.

இந்த நிலையில் டிடிஎப் வாசன் தனது சமூக வலைத்தளத்தில் ’என்னை எவ்வளவு புண்படுத்த முடியுமோ அந்த அளவுக்கு புண்படுத்தி வருகிறார்கள் என்றும் தர்மத்தை மீறுகிறார்கள் என்றும் அதனை எடுத்துக் கூறினால் நாம் கெட்டவர்களாக தெரிகிறோம் என்று தெரிவித்துள்ளார்.

நானும் இயக்குனரும் காரில் பயணம் செய்து கொண்டிருந்தபோது நான் காரை இயக்கியதாக செய்திகள் வெளியானது. ஆனால் நான் காரை இயக்கவில்லை. இயக்குனர் தான் காரை ஓட்டினார், நான் அருகில் உட்கார்ந்திருந்தேன். உண்மையில் நான் வாகனம் ஓட்டி இருந்தால் ஆம் என்று ஒப்புக் கொண்டிருப்பேன். ஆனால் என் மீது பொய் குற்றச்சாட்டு கூறப்பட்டு வருகிறது.

விபத்து நடந்ததும் பலரும் நான் ஆட்டோவில் தப்பிச் சென்று விட்டதாக கூறியுள்ளனர். மேலும் மது போதையில் விபத்து நடந்ததாகவும் கூறி வருகின்றனர். அவை அனைத்தும் தவறானது. விபத்து நடந்த இடத்தில் தான் நாங்கள் இருந்தோம் என்பதை சிசிடிவி யில் இருக்கும் காட்சிகளை வைத்து தெரிந்து கொள்ளலாம். நாங்கள் காவல்துறையினர் வரும் வரை காத்திருந்து விசாரணைக்கு பிறகு தான் மருத்துவமனைக்கு சென்றோம்.

என்னை தற்கொலைக்கு தூண்டும் வகையில் பலர் செயல்படுகிறார்கள். எதிர்காலத்தில் நான் தற்கொலை செய்து கொண்டேன் என செய்தி வந்தால் அது திட்டமிட்ட கொலை என்று உங்களுக்கு புரியும் என்று நினைக்கிறேன் என்று தெரிவித்துள்ளார். அவருடைய இந்த வீடியோ பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.