டிடிஎஃப் வாசன் ஹீரோவாக நடிக்கும் 2வது படம்.. டைட்டில் லுக் போஸ்டர் ரிலீஸ் செய்த பிரபல நடிகர்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
டிடிஎஃப் வாசன் ஏற்கனவே ’மஞ்சள் வீரன்’ என்ற படத்தில் ஹீரோவாக நடித்து வரும் நிலையில் அவர் ஹீரோவாக நடிக்கும் இரண்டாவது திரைப்படத்தின் அறிவிப்பு வெளியாகி டைட்டில் போஸ்டரும் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
சில மாதங்களுக்கு முன்னர் சென்னை - பெங்களூரு சாலையில் பைக்கில் செல்லும் போது வீலிங் செய்ததாக டிடிஎஃப் வாசன் கைது செய்யப்பட்டார் என்பதும் அதன் பிறகு அவர் ஜாமீனில் வெளியே வந்தார் என்பதும் தெரிந்தது. அதன் பிறகு சமீபத்தில் அவர் கார் ஓட்டும் போது போன் பேசியதாக குற்றச்சாட்டு எழுந்ததை அடுத்து மீண்டும் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் வெளிவந்துள்ளார்.
இந்த நிலையில் அவர் ஏற்கனவே ’மஞ்சள் வீரன்’ என்ற படத்தில் நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்தை செல்அம் என்பவர் இயக்கி வரும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே விறுவிறுப்பாக நடந்து வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் தற்போது டிடிஎஃப் வாசன் நடிக்கும் அடுத்த திரைப்படம் ’ஐபிஎல்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டு டைட்டில் போஸ்டரும் வெளியாகி உள்ளது. கிஷோர் மற்றும் டிடிஎஃப் வாசன் இணைந்து நடிக்கும் இந்த படத்தில் ’விருமாண்டி’ அபிராமி உள்பட பலர் நடிக்க உள்ளனர். பிரபல நடிகர் ஆர்யா இந்த படத்தின் டைட்டில்லுக் போஸ்டரை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.
இந்த படத்தை கருணாகரன் என்ற அறிமுகம் இயக்குனர் இயக்க உள்ளார் என்பதும் இந்த படத்திற்கு பிச்சுமணி ஒளிப்பதிவு, அஸ்வின் விநாயகமூர்த்தி இசை மற்றும் கோபி கிருஷ்ணா படத்தொகுப்பு பணியை கவனிக்க உள்ளனர். இந்த படத்தை ராதா பிலிம் இன்டர்நேஷனல் என்ற நிறுவனம் தயாரிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Happy to unveil the Title of #GRMadhanKrishnan 's #RadhaFilmInternational as #IPL starring #Kishore @abhiramiact #TTFVasan ✨ Best wishes to the whole Team 🎉
— Arya (@arya_offl) June 15, 2024
Directed by @karunak03320248 @AshwinVinayagam @spmani2202@directorbose @ActorDileepan @DineshAction360… pic.twitter.com/XMclLRrXiY
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments