தொடர்ந்து பைக் ஓட்டுவேன், என்னிடம் சர்வதேச லைசென்ஸ் இருக்குது: விடுதலையான டிடிஎப் வாசன் பேட்டி..!

  • IndiaGlitz, [Friday,November 03 2023]

யூடியூபர் டிடிஎஃப் வாசன் சிறையில் இருந்து விடுதலை ஆகி உள்ள நிலையில் தன்னிடம் சர்வதேச லைசன்ஸ் இருப்பதாகவும் அதனால் தொடர்ந்து பைக் ஓட்டுவேன் என்றும் கூறியுள்ளார்.

கடந்த சில வாரங்களுக்கு முன்னர் சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் பைக் ஓட்டிய டிடிஎஃப் வாசன், சாகசம் செய்ய முயன்ற போது விபத்துக்குள்ளானார். இந்த விபத்தில் அவருக்கு பெரிய அளவில் காயம் இல்லை என்றாலும் ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் அவர் வாகனம் ஓட்டியதாக கைது செய்யப்பட்டார்.

அதன் பிறகு அவர் பலமுறை ஜாமீனுக்கு விண்ணப்பம் செய்தும் ஜாமீன் கிடைக்கவில்லை. இதையடுத்து கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் அவருக்கு சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் அளித்தது.

இந்த நிலையில் சற்றுமுன் அவர் சிறையில் இருந்து வெளியே வந்த டிடிஎஃப் வாசன், செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது ’விபத்தில் கை போனதை விட லைசென்ஸ் போனதுதான் மனம் வருந்தினேன் என்றும் லைசென்ஸ் ரத்து என்பதை கேள்விப்பட்டு கண் கலங்கிவிட்டேன் என்றும் தெரிவித்தார்.

ஆனால் அதே நேரத்தில் என்னிடம் சர்வதேச லைசென்ஸ் இருக்கிறது என்றும் அதனால் தொடர்ந்து பைக் ஓடுவேன் என்றும் தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.