close
Choose your channels

எனது படத்தில் இருந்து டிடிஎஃப் வாசன் நீக்கப்படுகிறார்: இயக்குனர் அதிரடி அறிவிப்பு..

Tuesday, October 1, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல யூடியூபர் டிடிஎஃப் வாசன், "மஞ்சள் வீரன்" என்ற படத்தில் நடித்துக் கொண்டிருந்த நிலையில், அந்த படத்தில் இருந்து அவர் நீக்கப்பட்டுள்ளதாக இயக்குனர் செல்அம் அறிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல யூடியூபர் டிடிஎஃப் வாசன், பைக்கை வேகமாக ஓட்டி சர்ச்சையில் சிக்கினார் என்பதும், சாலை விதிகளை மீறியதாக கைது செய்யப்பட்டு, அதன் பிறகு ஜாமீனில் வெளிவந்தார் என்பதும் தெரிந்தது.

இந்த நிலையில், டிடிஎஃப் வாசன் "மஞ்சள் வீரன்" படத்தில் நாயகனாக நடிக்க இருப்பதாக 2023ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் அறிவிப்பு வெளியானது. அன்றே போஸ்டரும் வெளியானது என்பதும், படத்தின் படப்பிடிப்பு நடந்ததாக கூறப்பட்டது.

ஆனால் திடீரென "மஞ்சள் வீரன்" படத்தில் இருந்து டிடிஎஃப் வாசன் நீக்கப்பட்டதாகவும், இயக்குனர் செல்அம் அறிவித்துள்ளார். "என்னுடன் இணைந்து பயணிக்க வேண்டும் என டிஎஃப் வாசன் விரும்பினார், ஆனால் சூழ்நிலை ஒத்துவரவில்லை. புதிய கதாநாயகன் அக்டோபர் 15ஆம் தேதி அறிவிக்கப்படுவார். எனது படத்தில் அவர் நடிக்கவில்லை என்றாலும், அவர் எனது தம்பியைப் போல இருக்கிறார், அவருடன் எனது உறவு தொடரும்," என்று இயக்குனர் செல்அம் தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment