விஜய் டிவியின் ரியாலிட்டி நிகழ்ச்சியில் டிடிஎப் வாசன் காதலியா? இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!

  • IndiaGlitz, [Monday,April 08 2024]

விஜய் டிவியின் ரியாலிட்டி நிகழ்ச்சி ஒன்றில் டிடிஎஃப் வாசன் காதலி போட்டியாளராக பங்கேற்க இருப்பதாக கூறப்படுவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

விஜய் டிவியில் கடந்த நான்கு ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் விரைவில் ஒளிபரப்பாக இருப்பதாகவும் செஃப் தாமு மற்றும் செஃப் மாதம்பட்டி ரங்கராஜ் ஆகியோர் தலைமையில் நடக்க இருக்கும் இந்த நிகழ்ச்சி குறித்த புரமோ வீடியோக்கள் அவ்வப்போது வெளியாகி வைரல் ஆகி வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம்.

இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியின் கோமாளிகளாக குரேஷி, ராமர், புகழ், சுனிதா உள்பட ஒரு சிலர் கலந்து கொள்ள இருக்கும் நிலையில் ரக்சன் மற்றும் மணிமேகலை தொகுத்து வழங்கவுள்ளனர். இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் குக்குகள் தேர்வு நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் சமீபத்தில் பைக் வேகமாக ஓட்டி விபத்தை ஏற்படுத்தி சர்ச்சைக்குள்ளான டிடிஎஃப் வாசன் காதலி ஷாலின் சோயா என்பவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் ஒரு போட்டியாளராக வர இருப்பதாக கூறப்படுகிறது. இந்த தகவலை கேட்ட நெட்டிசன்கள் ‘இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே? என கமெண்ட் செய்து வருகின்றனர்.

ஏற்கனவே ஒரு சில தமிழ் படங்களில் நடித்துள்ள ஷாலின் சோயா குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் போட்டியாளராக கலந்து கொள்வாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.