close
Choose your channels

டிடிஎஃப் வாசனின் 'மஞ்சள் வீரன்' நாயகியும் யூடியூப் பிரபலமா?

Tuesday, July 18, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

யூடியூப் மூலம் பிரபலமான டிடிஎஃப் வாசன் ’மஞ்சள் வீரன்’ என்ற திரைப்படத்தில் நடிக்க இருக்கும் நிலையில் இந்த படத்தின் நாயகியாக நடிக்க இருப்பவரும் யூடியூப் மூலம் பிரபலமானவர் தான் என்று கூறப்படுகிறது.

யூடியூப் மூலம் பிரபலமான டிடிஎஃப் வாசன் வேகமாக பைக்கை ஒட்டி அதை நேரடியாக வீடியோவாக பதிவு செய்து பிரபலமானார். இவர் அவ்வப்போது சாலை விதிகளை மீறியதாக அபராதமும் செலுத்தினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.



இந்த நிலையில் சமீபத்தில் டிடிஎஃப் வாசன் பிறந்தநாளின் போது அவர் நடிக்க இருக்கும் முதல் திரைப்படம் ஆன ’மஞ்சள் வீரன்’ என்ற படத்தின் அறிவிப்பு வெளியானது என்பதும் பர்ஸ்ட் லுக் போஸ்டரே அசத்தலாக இருந்தது என்பதையும் பார்த்தோம்.

இந்த நிலையில் விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருக்கும் நிலையில் இந்த படத்தின் நாயகி குறித்த தகவல் கசிந்து உள்ளது. யூடியூப் மூலம் பிரபலமான டிடிஎஃப் வாசன் நடிக்கும் ’மஞ்சள் வீரன் படத்தின் நாயகியும் யூடியூப் பிரபலம் தான் என்றும் அவர் அமலா சாஜி என்றும் கூறப்படுகிறது. இது குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பை படக்குழுவினர் விரைவில் அறிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment