அமெரிக்கா, கனடாவுக்கு விடுத்த சுனாமி எச்சரிக்கை வாபஸ்

  • IndiaGlitz, [Wednesday,January 24 2018]

அமெரிக்காவில் உள்ள அலாஸ்கா அருகே இன்று உள்ளூர் நேரப்படி அதிகாலையில் 7.9 என்ற ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. இதனை அடுத்து கடந்த சில மணி நேரங்களுக்கு முன்னர் மத்திய கடலோர மற்றும் வடகிழக்கு தீவு பகுதிகளில்  சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

கடலோர பகுதியில் இருப்பவர்கள் உடனடியாக பாதுகாப்பான இடங்களை நோக்கி செல்ல அதிகாரிகள் அறிவுறுத்தினர். இந்த நிலையில் நிலநடுக்கம் காரணமாக ஒரு அடிக்கும் குறைவான அலைகள் மட்டுமே ஏற்பட்டதை அடுத்து சுனாமி எச்சரிக்கை வாபஸ் பெறப்படுவதாகவும், பொதுமக்கள் அச்சமின்றி அவரவர் இடத்திற்கு செல்லலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் சான்பிராசிஸ்கோ நகரை சேர்ந்தவர்கள் இன்னும் 12 மணி நேரத்திற்கு கடற்கரைக்கு மிக அருகில் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

More News

தமிழக அரசை கிண்டல் செய்த இசையமைப்பாளர் டி.இமான்

கோலிவுட் திரையுலகில் பிரபல இசையமைப்பாளர் டி.இமான் அவர்கள் 100 படங்களுக்கு இசையமைத்திருக்கும் நிலையில் இமான்100' என்ற நிகழ்ச்சி இன்று சென்னையில் நடைபெற்றது.

டாக்டர் ராஜசேகர்-ஜீவிதா மகள் அறிமுகமாகும் படம்

'இதுதாண்டா போலீஸ்' டாக்டர் ராஜசேகரை சினிமா ரசிகர்கள் மறந்திருக்க முடியாது. தெலுங்கு திரையுலகில் சூப்பர் ஸ்டாராக பவனிவந்த ராஜசேகரின் மகள் தற்போது தெலுங்கு படம் ஒன்றில் அறிமுகமாகவுள்ளார்.

கமல்ஹாசனை சந்திக்க வந்த அன்புமணியின் மனைவி

உலக நாயகன் கமல்ஹாசன் வரும் பிப்ரவரி 21ஆம் தேதி அரசியல் கட்சியை தொட

விஜய்சேதுபதியின் 'ஒருநல்ல நாள் பாத்து சொல்றேன்' பிரஸ்மீட்: சில துளிகள்

விஜய்சேதுபதி, கவுதம் கார்த்திக், காயத்ரி, நிஹாரிகா உள்பட பலர் நடிப்பில் ஆறுமுககுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஒருநல்ல நாள் பாத்து சொல்றேன்' திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு

மீண்டும் தளபதியுடன் இணையும் பிரபல ஸ்டண்ட் மாஸ்டர்

தளபதி விஜய் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வரும் 'தளபதி 62' படத்தின் படப்பிடிப்பு சென்னை ஈசிஆர் அருகே அமைக்கப்பட்டுள்ள பிரமாண்டமான செட்டில் நடைபெற்று வருகிறது.