அமெரிக்கா, கனடாவுக்கு விடுத்த சுனாமி எச்சரிக்கை வாபஸ்
Send us your feedback to audioarticles@vaarta.com
அமெரிக்காவில் உள்ள அலாஸ்கா அருகே இன்று உள்ளூர் நேரப்படி அதிகாலையில் 7.9 என்ற ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. இதனை அடுத்து கடந்த சில மணி நேரங்களுக்கு முன்னர் மத்திய கடலோர மற்றும் வடகிழக்கு தீவு பகுதிகளில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
கடலோர பகுதியில் இருப்பவர்கள் உடனடியாக பாதுகாப்பான இடங்களை நோக்கி செல்ல அதிகாரிகள் அறிவுறுத்தினர். இந்த நிலையில் நிலநடுக்கம் காரணமாக ஒரு அடிக்கும் குறைவான அலைகள் மட்டுமே ஏற்பட்டதை அடுத்து சுனாமி எச்சரிக்கை வாபஸ் பெறப்படுவதாகவும், பொதுமக்கள் அச்சமின்றி அவரவர் இடத்திற்கு செல்லலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் சான்பிராசிஸ்கோ நகரை சேர்ந்தவர்கள் இன்னும் 12 மணி நேரத்திற்கு கடற்கரைக்கு மிக அருகில் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout