கீர்த்திசுரேஷை தேர்வு செய்தது ஏன்? விக்னேஷ் சிவன் விளக்கம்

  • IndiaGlitz, [Wednesday,July 26 2017]

இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் 'தானா சேர்ந்த கூட்டம்' திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு வெகுவிரைவில் முடிவடையவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

இந்த நிலையில் இந்த படத்தின் நாயகி முதலில் நயன்தாரா என்று கூறப்பட்ட நிலையில் கீர்த்திசுரேஷ் தேர்வு செய்யப்பட்டது எப்படி என்ற கேள்விக்கு பதிலளித்த இயக்குனர் விக்னேஷ் சிவன், ''இந்த படத்தில் நயன்தாரா நடிக்கவுள்ளதாக வெளிவந்த செய்தி வெறும் வதந்தியே என்றும், இந்த படத்தின் கதைப்படி கீர்த்தி சுரேஷ் ஒரு மிடில்கிளாஸ் பெண்ணாக நடிப்பதாகவும், இதுவரை சூர்யாவுடன் நடிக்காத ஒரு ஹீரோயினாக இருந்தால் நன்றாக இருக்கும் என்ற கார்ணத்தால் அவர் தேர்வு செய்யப்பட்டதாகவும் கூறினார்.

மேலும் இந்த படத்தின் கதையில் அரசியல் இல்லை என்று கூறிய விக்னேஷ் சிவன், இந்த கதை சூர்யாவுக்காகவே உருவாக்கப்பட்ட புதிய களம் என்றும், அவரை இதுவரை ஏற்காத வேடத்தில் பொருத்தியிருப்பதாகவும் கூறினார்.

More News

வைகோவை விமர்சித்தாரா ரோபோசங்கர்

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குறித்து நகைச்சுவை நடிகர் ரோபோசங்கர் தனது டுவிட்டர் பக்கத்தில் சர்ச்சைக்குரிய வகையில் விமர்சனம் செய்ததாக நேற்றும் இன்று டுவிட்டர் இணணயதளத்தில் செய்தி பரவி வருகிறது

நடிகர் சங்க கட்டிடம்: சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் புதிய நிர்வாகிகளாக விஷால் அணியினர் பதவியேற்றதும், சங்கத்துக்கு என சொந்த கட்டிடம் கட்ட முடிவு செய்யப்பட்டு அதற்கான அடிக்கல் நாட்டு விழாவும் சமீபத்தில் நடைபெற்றது

'விவேகம்' சென்சார் குறித்த முக்கிய தகவல்

தல அஜித் நடிப்பில் இயக்குனர் சிவா இயக்கிய 'விவேகம்' திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த வாரம் முடிவடைந்த நிலையில் கடந்த சில நாட்களாக இந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது.

வாரிசுகள் காட்டிய பச்சைக்கொடி: களமிறங்குவார்களா கமல்-ரஜினி?

கடந்த சில நாட்களாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களும், உலக நாயகன் கமல்ஹாசன் அவர்களும் அரசியலில் குதிக்கும் சூழ்நிலை தென்படுவதால் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது...

ரூபா ஐபிஎஸ்: திரைப்படம் ஆகிறதா சசிகலா சலுகை விவகாரம்?

சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைதண்டனை பெற்று பெங்களூர் பார்ப்பன அக்ராஹர சிறையில் தண்டனை அனுபவித்து வரும் சசிகலாவுக்கு சிறப்பு சலுகைகள் வழங்க ரூ.2 கோடி ஜெயில் உயரதிகாரிகளுக்கு கைமாறிய சமீபத்தில் குற்றச்சாட்டு எழுந்தது...