டிரம்ப் தங்கியிருக்கும் பூலோக சொர்க்கம்: ஓட்டல் அறை குறித்த அபூர்வ தகவல்
Send us your feedback to audioarticles@vaarta.com
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இரண்டு நாள் பயணமாக இந்தியாவுக்கு வருகை தந்துள்ள நிலையில் நேற்று அவர் ஒரு சில நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு, பின்னர் மனைவி மெலானியாவுடன் தாஜ்மஹாலை கண்டு ரசித்தார்
இந்த நிலையில் நேற்று அவர் டெல்லியில் உள்ள ஐடிசி மெளரியா என்ற ஓட்டலில் தங்கியுள்ளார். சாணக்கியா சூட் என்று அழைக்கப்படும் இந்த அறை 4600 சதுர அடி பரப்பளவை கொண்டது. இந்த அறையில் ஒரு நாள் இரவு தங்குவதற்கு வாடகை ரூபாய் எட்டு லட்சம் என்பது குறிப்பிடத்தக்கது. அனைத்து வசதிகளும் கொண்ட இந்த அறை 14வது மாடியில் அமைந்துள்ளது. பட்டினால் ஆன பேனல்கள் அமைக்கப்பட்ட சுவர், மரத்தாலான தரை மற்றும் மிகச் சிறந்த உள்கட்டமைப்பு, கண்ணை கவரும் அலங்காரங்கள் என இந்த அறை ஹோட்டல் அறையா அல்லது பூலோக சோர்க்கமா? என வாய் பிளக்க வைக்கும் அளவிற்கு உள்ளது
மயில் இருக்கைகள், பெரிய வரவேற்பறை, 12 பேர் அமரக்கூடிய உணவருந்தும் பகுதி, ஜிம், ஆடம்பரமான குளியலறை ஆகியவை இந்த அறையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. டெல்லியில் காற்றின் மாசு மிக மோசமாக இருக்கும் என்பது தெரிந்ததே. ஆனால் இந்த அறை மட்டும் குளிர் பிரதேசத்தில் இருப்பது போன்று மிக சுத்தமான காற்று நிலவும். டிரம்ப் குடும்பத்தினர்கள் விரும்பி சாப்பிடும் உணவை தயாரிக்கவே தனியாக சமையல் கலைஞர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் டிரம்ப் மற்றும் அவரது குடும்பத்தினர் இந்த ஓட்டலில் தங்கி உள்ளதால் இந்த ஓட்டலை சுற்றிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments