பாலியல் தொல்லை கொடுத்த குற்றச்சாட்டில் முன்னாள் அதிபர் டிரம்ப்-க்கு அதிரடி உத்தரவு!
Send us your feedback to audioarticles@vaarta.com
அமெரிக்க முன்னாள் அதிபர் டெனால்ட் டிரம்ப் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்தார் என்று பெண் பத்திரிக்கையாளர் ஒருவர் குற்றம் சாட்டிய நிலையில் அந்த வழக்குத் தொடர்பான தீர்ப்பு வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
அமெரிக்காவின் பிரபல பத்திரிக்கை ஒன்றில் பணியற்றிவந்த ஜீன் கரோல் என்பவர் டிரம்ப் தன்னை பாலியல் வன்கொடுமை செய்தார் என்று வழக்குத் தொடுத்திருந்தார். இந்த வழக்கு பெடரல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் டிரம்ப் பாலியல் வன்கொடுமை செய்ததற்கான ஆதாரம் இல்லை. ஆனால் பாலியல் தொல்லைக் கொடுத்திருக்கிறார் எனத் தீர்ப்பளித்த நீதிபதிகள் அவருக்கு 5 மில்லியன் டாலர் இழப்பீடு வழங்க வேண்டும் என உத்தரவிட்டு உள்ளனர்.
ஜீன் கரோல் எனும் பெண் எழுத்தாளர் தொடுத்த இந்த வழக்கானது தற்போது பெடரல் நீதிமன்றத்தில் நடைபெற்று தீர்ப்பு வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த வழக்கை 9 நீதிபதிகள் அடங்கிய அமர்வு விசாரித்துள்ளனர். மேலும் பாலியல் வன்கொடுமை நடக்கவில்லை என்பதை உறுதிப்படுத்திய நீதிபதிகள் பாலியல் தொல்லை கொடுத்ததற்காக 5 மில்லியன் டாலர் இழப்பீட்டு தொகை வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்.
இதுகுறித்து கருத்து பதிவிட்ட டிரம்ப் இது தமக்கு நேர்ந்த அவமானம் என்று சாடியுள்ளார். இந்நிலையில் இந்த தீர்ப்பை எதிர்த்து டிரம்ப் தரப்பு மேல்முறையீடு செய்யவுள்ளதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com