கொரோனா வைரஸ்க்கு புதிய பெயர் வைத்த அதிபர் ட்ரம்ப்!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
கொரோனா வைரஸ் பரவத் தொடங்கிய ஆரம்பக் கட்டத்தில் இருந்தே இந்த வைரஸை சீனாதான் பரப்பியது. சீனாவின் சதிச் செயலால் தற்போது உலகம் முழுவதும் நோய்த் தாக்கம் ஏற்பட்டு விட்டது எனக் குற்றம் சாட்டிய அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தொடர்ந்து கொரோனா வைரஸ் எனக் குறிப்பிடாமல் சீனா வைரஸ் என்றே பெயரிட்டு அழைக்கத் தொடங்கினார். இதுகுறித்த விசாரணைக்கு உலகச் சுகாதார நிறுவனமும் ஒப்புதல் வழங்கியது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அமெரிக்காவில் கொரோனா வைரஸ் கட்டுப்படுத்த முடியாதல் அளவிற்கு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.
இத்தகைய நெருக்கடி நிலையிலும் வருகிற நவம்பர் 3 ஆம் தேதி அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற இருக்கிறது. அந்தத் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் அதிபர் ட்ரம்ப் போட்டியிடுகிறார். ஜனநயாகக் கட்சி சார்பில் முன்னாள் துணை ஜனாதிபதியாக இருந்த ஜோ பிடன் போட்டியிட இருக்கிறார். ஒருபக்கம் அமெரிக்காவில் கொரோனா தாக்கம் அதிகரித்து வந்தாலும் தேர்தலுக்கான பிரச்சாரத்தையும் அதிபர் ட்ரம்ப் தொடங்கிவிட்டார். நேற்று முன்தினம் ஒக்லஹோமா மாகாணத்தில் உள்ள துல்சா நகரத்தில் தனது முதல் பிரச்சாரத்தை நடத்தினார் அதிபர் ட்ரம்ப். அப்போது பேசிய அதிபர் ட்ரம்ப் நான் கொரோனா பரிசோதனையை குறைக்க சொல்லி உத்திரவிட்டு இருக்கிறேன். மேலும் கொரோனா ஒரு பெருந்தொற்று. அதை எல்லோரும் கொரோனா கோவிட் -19 என்ற பெயரால் அழைக்கிறார்கள். நான் அதை குங்ஃப்ளூ என்றுதான் நான் அழைப்பேன் எனக் காட்டமாகக் கருத்துத் தெரிவித்து இருக்கிறார்.
மேலும் பேசிய அதிபர் ட்ரம்ப் கொரோனாவிற்கு எங்கள் நாட்டில் 19 வெவ்வேறு பெயர்களும் வழங்கப்பட்டு வருகின்றன என கிண்டல் தொணியில் கூறியிருக்கிறார். “கொரோனா வைரஸ் தொற்று ஒரு நோய்தான். இதை இதுவரை வரலாற்றில் இல்லாத வகையில் வேறு எந்த நோயையும் பல்வேறு பெயர்களால் அழைக்க முடியும். நாங் குங்ஃப்ளூ என்று அழைப்பேன்” என்று அதிபர் ட்ரம்ப் பேசியிருப்பது குறித்து தற்போது விமர்சனக் கருத்துகளும் வைக்கப்பட்டு வருகின்றன. மேலும், “கொரோனா பரிசோதனை இரண்டு பக்கமும் கூர்மையான வாள். அதன் மோசமான பகுதி பரிசோதனைதான். நீங்கள் எந்தளவுக்கு பரிசோதனைகளை செய்கிறீர்கள். அந்த அளவுக்கு கூடுதாலாக தொற்று பாதித்தவர்களை கண்டறிய முடியும். எனவேதான் பரிசோதனைகளை குறைத்துக் கொள்ளுங்கள் என்றேன். ஆனால் அவர்கள் பரிசோதனைக்கு மேல் பரிசோதனை என்று செய்து கொண்டே இருக்கிறார்கள்” என்று அதிகாரிகள் மீது குற்றம் சாட்டவும் செய்தார்.
இந்நிலையில், அதிபர் ட்ரம்ப் கொரோனா வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்த தவறிவிட்டார். இதனால் அந்நாட்டில் பொருளாதாரம் அதள பாதாளத்திற்குச் சென்று விட்டதாகவும் விமர்சிக்கப் படுகிறது. அந்நாட்டில் வேலை இழந்தோர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து விட்டதாகக் கூறப்படுகிறது. மே 25 ஆம் தேதி கறுப்பின இளைஞர் காவல் துறையினரின் பிடியில் சிக்கி உயிரிழந்து விட்ட சம்பவம் உலகம் முழுவதும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியது. அப்போது தொடங்கிய கறுப்பினத்தவர்கள் போராட்டம் இன்னும் முடிவிற்கு வரவேயில்லை. கொரோனா உயிரிழப்பு, பொருளாதார நெருக்கடி, கறுப்பினத்தவர்கள் போராட்டம் என அனைத்து செயல்களிலும் ட்ரம்ப் தவறான வழிமுறைகளை கையாண்டார் என்று எதிர்க்கட்சிகள் அவர்மீது குற்றம் சாட்டி வருகின்றன. இந்நிலையில் அவரின் செல்வாக்கு குறைந்து வருவதாகவும் சில தரப்புகள் கணிப்புகளை வெளியிட்டு இருக்கின்றன.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments