நாட்டை விட்டே வெளியேறி விடுவேன்… எதிர்க்கட்சியினரை நோக்கி சாவல் விடும் அதிபர் ட்ரம்ப்!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
வருகிற நவம்பர் 3 ஆம் தேதி அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற இருக்கிறது. இத்தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் டொனால்ட் ட்ரம்ப் போட்டியிடுகிறார். அதற்கான பிரச்சாரத்தில் ஈடுபட்டபோது, ஒருவேளை இத்தேர்தலில் நான் தோற்றால் நாட்டை விட்டு வெளியேறுவேன் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்து உள்ளார். காரணம் நான் ஒரு தகுதியில்லாத நபருடன் போட்டியிடுகிறேன் எனக்கூறி மேலும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.
அதிபர் தேர்தலுக்கு இன்னும் 2 வாரங்களே உள்ள நிலையில் அமெரிக்காவில் பிரச்சாரங்கள் சூடுபிடித்து இருக்கின்றன. ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பிடனுக்கு ஆதரவாக முன்னாள் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா பிரச்சாரம் செய்ய இருப்பதாகவும் செய்திகள் வெளியானது. இந்நிலையில் இருக்கட்சி வேட்பாளர்களும் நேருக்கு நேராக மற்றவர்கள்மீது குற்றச்சாட்டுகளை வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் நேற்று ஜார்ஜாவில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய ட்ரம்ப், நான் தோற்றுப் போனால் நாட்டை விட்டு வெளியேறுவேன் எனக்கூறி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.
மேலும் “வரலாற்றிலேயே மிகவும் மோசமான வேட்பாளருடன் போட்டியிடுகிறேன். ஒருவேளை அவரிடம் தோற்றுவிட்டால் எனது வாழ்க்கை வீண் என்று நாட்டை விட்டு வெளியேறுவதே நல்லது என்று கருதுகிறேன். அப்படி நடந்தால் நான் மகிழ்ச்சியாக இருக்க மாட்டேன். தேர்தலில் தோற்றால் நான் இந்த நாட்டை விட்டு வெளியேறலாம். அதுபற்றி எனக்கு தெரியவில்லை.
ஜோ பிடன் குடும்பம் ஒரு கிரிமினல் நிறுவனம் போன்றது. ஜனநாயகக் கட்சியினர் அமெரிக்காவையே கம்யூனிஸ்ட் நாடாக மாற்ற விரும்புகிறார்கள். அவர்களிடம் ஒன்றுமே இல்லை. உங்களது மதிப்புகள் மீது வெறுப்புகள் இருக்கிறது. இந்த செல்வந்த தாராளவாத நயவஞ்சகர்களுக்கு நாம் ஒரு செய்தியை அனுப்ப வேண்டிய நேரம் இது’‘ எனப் பரபரப்பாக பேசியிருக்கிறார் அதிபர் ட்ரம்ப்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments