ஆபாச நடிகைக்கு பணம் கொடுத்த விவகாரம்: முன்னாள் அமெரிக்க அதிபர் டிரம்ப் கைது..!
Send us your feedback to audioarticles@vaarta.com
ஆபாச நடிகைக்கு முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பணம் கொடுத்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இது குறித்து வழக்கில் நேற்று அவர் கைது செய்யப்பட்டு பின் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்க குடியரசு கட்சியை சேர்ந்த டொனால்ட் டிரம்ப் கடந்த 2017 முதல் 2021 வரை அமெரிக்க அதிபராக இருந்தார் என்பதும் பிரபல தொழிலதிபரான அவருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கடந்த 2006 ஆம் ஆண்டு அமெரிக்காவில் உள்ள ஐந்து நட்சத்திர ஓட்டல் அருகில் தன்னுடன் பாலியல் உறவு கொண்டதாக ஆபாச நடிகை ஸ்டார்மி டேனியல் என்பவர் குற்றம் சாட்டினார்.
அடுத்து வரும் அதிபர் தேர்தலுக்காக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் ட்ரம்புக்கு இது மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் ஆபாச நடிகை ஸ்டார்மி தன் மீது குற்றம் சாட்டாமல் இருக்க டிரம்ப் தனக்கு ஒரு கோடி ரூபாய் பணம் கொடுத்ததாகவும் கூறியதை அடுத்து அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் ட்ரம்புக்கு எதிராக நீதிபதி கிரிமினல் குற்றச்சாட்டு பதிவு செய்த நிலையில் அவர் நேற்று கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்டவுடன் பலத்த பாதுகாப்புடன் நீதிமன்றம் அழைத்துச் செல்லப்பட்ட அவர் இந்திய நேரப்படி இரவு 11 மணிக்கு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். வழக்கு விசாரணையின் போது டிரம்ப் மீதான குற்றச்சாட்டுகள் வாசிக்கப்பட்ட நிலையில் அந்த குற்றச்சாட்டுகள் அனைத்தையும் டிரம்ப் மறுத்தார். இதனை அடுத்து அவர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout