US அதிபர் டிரம்ப்- கிம்முக்கு லிப்ட் கொடுக்க நினைத்தாரா? வெளிச்சத்திற்கு வந்த அதிர்ச்சி தகவல்!
- IndiaGlitz, [Monday,February 22 2021]
அமெரிக்காவும் வடகொரியாவும் கடந்த 1960 களில் இருந்தே எலியும் பூனையுமாக செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு வியட்நாமில் நடைபெற்ற உச்சிமாநாட்டிற்கு சென்ற அப்போதைய அதிபர் டிரம்ப், அதே மாநாட்டிற்கு வருகை தந்த வடகொரிய அதிபர் கிம் ஜான் உன்னிற்கு தன்னுடைய விமானத்தில் லிப்ட் கொடுக்க நினைத்தார் என்ற தகவலை பிபிசி தற்போது வெளியிட்டு இருக்கிறது.
முன்னாள் அமெரிக்க அதிபர் டிரம்பை பற்றி Trump Take on the world எனும் பெயரில் கட்டுரை ஒன்றை தற்போது பிபிசி வெளியிட்டுள்ளது. அந்தக் கட்டுரையில் எதிரி நாடாக இருந்து வரும் வடகொரிய அதிபருக்கு டிரம்ப் லிப்ட் கொடுக்க நினைத்தார் என்ற தகவலை சுட்டிக் காட்டி இருக்கிறது. மேலும் உலகிலேயே மிக விலை உயர்ந்த அதிநவீன விமானத்தை பயன்படுத்தி வரும் டிரம்ப் தன்னுடைய விமானத்தில் கிம்முக்கு லிப்ட் கொடுக்க நினைத்தார். ஆனால் அது முடியாமல் போய்விட்டது என்றும் கூறப்பட்டு உள்ளது.
ஒருவேளை கிம் அந்த விமானத்தைப் பயன்படுத்தி இருந்தால் வடகொரியா மீது முதல் முறையான ஒரு நாட்டு விமானம் பயணம் செய்து இருக்க முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது. காரணம் வடகொரியா தன்னுடைய நாட்டின் எல்லையில் வேறு எந்த நாட்டு விமானத்தையும் பயணிக்க அனுமதிப்பது இல்லை. அதோடு அந்த நாட்டின் வைபை வசதி முற்கொண்டு வெளிநாட்டின் எந்த ஊடகத்திற்கும் இதுவரை அனுமதி வழங்கப்பட்டது இல்லை.
இந்நிலையில் அணு ஆயுதத் தயாரிப்பு, உலக நாடுகளுக்கு அச்சுறுத்தல் எனப் பல்வேறு நிலைகளில் இயங்கிவரும் வடகொரியா அமெரிக்காவிடம் தொடர்ந்து எதிர்ப்பை காட்டிக் கொண்டே வருகிறது. முன்னதாக ஒபாமா ஆட்சிக் காலத்தில் இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்த முயற்சியும் மேற்கொண்டு அது கடைசியில் தோல்வியில் முடிந்ததும் குறிப்பிடத்தக்கது. இப்படி எலியும் பூனையுமான இருந்து வரும் இருநாட்டு அதிபர்களும் ஒருவேளை ஒரே விமானத்தில் பயணித்து இருந்தால் என்ன நடந்து இருக்கும்? என்பது போன்ற சூடான விவாதத்தையும் தற்போது ஊடகங்கள் கிளற ஆரம்பித்து விட்டன.