டொனால்ட் டிரம்ப் மீது 4 முக்கிய பிரிவுகளில் வழக்குப்பதிவு… உறுதியானால் நீண்டநாள் சிறையா?

  • IndiaGlitz, [Thursday,August 03 2023]

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மீது 4 முக்கியப் பிரிவுகளில் வாஷிங்கடனில் உள்ள அந்நாட்டு மத்திய நீதிமன்றம் வழக்குப் பதிவு செய்துள்ளது. இந்தக் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு நீண்ட காலம் சிறை தண்டனை கிடைக்கும் என்றும் கூறப்படும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த டெனால்ட் டிரம்ப் 2020 அமெரிக்கத் தேர்தலில் தோல்வியடைந்தார். இதையடுத்து அவரது தோல்வியை ஏற்றுக்கொள்ளாத அவரது ஆதரவாளர்கள் வெள்ளை மாளிகை முன்னால் கலவரத்தில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து தேர்தலில் வெற்றிப்பெறுவதற்காக டிரம்ப் பல்வேறு குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.

அந்த வகையில் முன்னாள் ஆபாச நடிகை ஒருவருடன் இருந்த தொடர்பை மறைப்பதற்காக தேர்தல் நிதியில் இருந்து அவர் லஞ்சம் வழங்கியதாக மன்ஹாட்டன் நீதிமன்றத்தில் வழக்கு நடத்தப்பட்டு 5 மில்லியன் டாலர் இழப்பீடு வழங்க வேண்டும் என்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இதையடுத்து அவர் மேல் முறையீடு செய்யவுள்ளதாகத் தகவல்கள் கூறப்பட்டன. மேலும் பத்திரிக்கையாளரான ஜுன் கரோல் என்பவரை டிரம்ப் பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக மியாமி நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது.

இதையடுத்து வெள்ளை மாளிகையில் இருந்து செல்லும்போது டிரம்ப் முக்கிய அரசு ஆவணங்களை எடுத்துச் சென்றதாக அவருடைய வழக்கறிஞரே சாட்சி சொன்ன நிலையில் 7 பிரிவுகளின் கீழ் மன்ஹாட்டன் நீதிமன்றத்தில் மேலும் வழக்குப் பதிவுசெய்யப்பட்டது.

இந்த வழக்குகளை அவர் எதிர்கொண்டு வரும் நிலையில் 2020 தேர்தலின் போது ஜோ பைடனுக்கு வாக்குகள் செல்லுவதை தவிர்ப்பதற்காக டிரம்ப் சதித்திட்டம் தீட்டியதாக அரசு சார்பில் விசாரணை நடத்தப்பட்டு வந்தது. அந்த விசாரணையில் பல்வேறு முக்கிய தகவல்கள் கிடைத்திருப்பதாகக் கூறப்படும் நிலையில் தற்போது வாஷிங்டனில் உள்ள மத்திய நீதிமன்றத்தில் 4 முக்கியப் பிரிவுகளில் டிரம்ப் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருக்கின்றன.

அதில் 5 வருட சிறை தண்டனைக்குரியது – அமெரிக்காவை ஏமாற்றும் நோக்கில் சதி செய்தல், 20 வருட சிறை தண்டனைக்குரியது – உத்தியோகப்பூர்வ நடவடிக்கைகளுக்கு இடையூறு செய்தல், உத்தியோகப்பூர்வ நடவடிக்கைகளை தடுக்க சதி செய்தல் மற்றும் 10 வருட சிறை தண்டனைக்குரிய குற்றம் – அரசியலமைப்பினால் வழங்கப்பட்ட உரிமைகளை ஒருவர் நிறைவேற்ற முயலுவதை தடுக்க சதி செய்தல் போன்ற பிரிவுகளில் டிரம்ப் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இதுதொடர்பாக வாஷிங்டன் நீதிமன்றத்தில் ஆஜராகும்படி சம்மன் அனுப்பப்பட்டு இருக்கிறது.

மேலும் டிரம்பின் இத்தகைய நடவடிக்கைகளுக்கு ஆதரவாக 6 பேர்கள் உதவி செய்ததாகக் கூறப்படும் நிலையில் அவர்களுடைய பெயர்கள் இந்த வழக்குகளில் குறிப்பிடப்படவில்லை. ஆனால் எதிர்காலத்தில் அவர்களுடைய பெயர்கள் இதில் சேர்க்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப் படுகிறது.

ஜோ பைடனின் வெற்றியை நிலைகுலைய வைப்பதற்கான சதித் திட்டத்தில் டிரம்ப் ஈடுபட்டார் என்று கூறி 4 முக்கிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் இதுகுறித்து டிரம்ப் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், 2024 தேர்தல் பிரச்சாரத்திற்கு தான்செல்வதை தடுக்கும் விதமாக சிறப்பு வழக்கறிஞர் ஜேக் ஸ்மித் தீய செயல்களில் ஈடுபட்டு வருவதாக அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.

மேலும் 2016 தேர்தலில் நான் வென்றதை எதிர்த்து ஜனநாயக கட்சியினர் போராட்டம் நடத்தியதைப்போல் 2020 தேர்தல் முறையாக நடத்தப்படவிலை எனத் தெரிந்தால் அதனை எதிர்த்து போரிட எனக்கு முழு உரிமை உள்ளது என்று டிரம்ப் சுட்டிக்காட்டியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.