கடவுள் எனக்கு கொடுத்த வரம் கொரோனா… அதிபரின் கருத்தால் ஆடிப்போன மக்கள்!!!
- IndiaGlitz, [Thursday,October 08 2020]
கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வந்த அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தனது சிகிச்சைக்கு நடுவில், மருத்துவமனை வளாகத்திற்கு வெளியே காரில் உலா வந்து மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தினார். இந்நிலையில் சிகிச்சை முடிந்து கடந்த திங்கள் கிழமை வெள்ளை மாளிகை வந்த அதிபர் அங்கு முகக்கவசம் அணியாமல் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்ததாகப் பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில் கடவுள் கொடுத்த வரம்தான் கொரோனா நோய்த்தொற்று. தடுப்பு மருந்தின் அவசியத்தைப் புரிந்து கொண்டேன். மிக விரைவில் தடுப்பு மருந்து குறித்த அறிவிப்பு வெளிவரும் எனத் தற்போது கூறி மேலும் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறார். அதில் “எனக்கு கொரோனா வந்தது கடவுள் தந்த வரமாகவே கருதுகிறேன். கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிப்பதன் அவசியத்தை கற்றுக் கொடுத்திருக்கிறது. எனக் குறிப்பிட்ட அதிபர், மேலும் சீனாவில் உருவாக்கப்பட்டு அமெரிக்கா மற்றும் உலகத்திற்கு பேரழிவை ஏற்படுத்திய சீனா அதற்கு விலை கொடுக்க வேண்டியிருக்கும் என்றும் எச்சரித்துள்ளார்.
அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியாவிற்கு கடந்த 2 ஆம் தேதி கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப் பட்டது. அதைத் தொடர்ந்து இருவரும் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டனர். அதிபர் ட்ரம்ப்புக்கு ஆரம்பத்தில் கொரோனா அறிகுறி எதுவும் இல்லாமல் இருந்தாலும் பின்பு தொடர்ந்து அவருக்கு காய்ச்சல் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. மேலும் வயது மூப்பு மற்றும் உடல் எடை காரணமாக அவருக்கு சிகிச்சை கொடுக்கப்பட வேண்டும் என அதிகாரிகள் வலியுறுத்திய நிலையில் அலபாமா மாகாணத்தில் உள்ள வால்டர் ரெட் தேசிய இராணுவ மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டார்.
மருத்துவமனையில் 5 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த அதிபர் தனது மனைவியோடு வெள்ளை மாளிகையில் தற்போது தனிமைப்படுத்திக் கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது. மேலும் நேற்று முதல் அலுவலகப் பணிகளை கவனித்து வருவதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. வரும் நம்பவர் 3 ஆம் தேதி அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற இருக்கும் சூழ்நிலையில் அதிபர் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு பின்னர் குணமடைந்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.