காரில் உலா வந்த டெனால்ட் ட்ரம்ப்… தனது ஆதரவாளர்களுக்காக கொரோனாவிற்கு நடுவிலும் சாகசம்!!!

 

அமெரிக்க அதிபர் டொனால்ட ட்ரம்ப்பிற்கு கடந்த வியாழக்கிழமை அன்று கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாக உறுதி செய்யப்பட்டது. அதையடுத்து அவரது மனைவி மெலனியாவிற்கும் தொற்று ஏற்பட்டு இருப்பதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. வருகிற நவம்பர் 3 ஆம் தேதி அமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தல் நடைபெற இருக்கும் சூழலில் ட்ரம்ப்பிற்கு கொரோனா உறுதிச் செய்யப்பட்டு இருக்கிறது. இதனால் ஜனாநயகக் கட்சி ஆதரவாளர்கள் மத்தியில் கடும் பதற்றம் நிலவும் என எதிர்பார்க்கப் படுகிறது. இந்நிலையில் அதிபர் ட்ரம்ப் உற்சாகமாக இருப்பதைப் போன்ற வீடியோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது.

அதிபர் ட்ரம்ப்பிற்கு கொரோனா இருப்பதாக அறிவிப்பு வெளியான நிலையில் “தான் நல்ல உடல்நிலையோடு இருப்பதாக” தனது டிவிட்டர் பதிவில் அவரே தெரிவித்து இருந்தார். இருந்தாலும் அவரது வயது மூப்பு, உடல் எடை காரணமாக அலபாமா மாகாணத்தில் உள்ள வால்டர் ரெட் தேசிய இராணுவ மருத்துவ மனையில் கடந்த வெள்ளிக் கிழமை சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டார். அங்கு சிகிச்சை அளித்து வந்த மருத்துவர்கள் வரும் 48 மணிநேரம் மிகவும் ஆபத்தானவை. அதிபருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது எனக் கூறியிருந்தனர்.

இதனால் பதற்றமான நிலையில் ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வந்தன. மேலும் ஒருவேளை அதிபருக்கு கொரோனா தீவிரமடைந்தால் அதிபர் தேர்தல் என்னவாகும் என்பது போன்ற விவாதங்களும் சூடு பிடித்தன. இப்படி அமெரிக்கா முழுவதும் கடும் பதட்டமான சூழல் நிலவி வரும் வேளையில் அதிபர் நேற்று மாலை வால்டர் ரெட் மருத்துவமனை வளாகத்திற்கு வெளியே ஒரு காரில் உற்சாகமாக உலா வந்திருக்கிறார். அப்போது எடுக்கப்பட்ட வீடியோவை தனது டிவிட்டர் பக்கத்தில் அவரே வெளியிட்டு இருக்கிறார்.

அந்த வீடியோ தற்போது இணையத்தில் கடும் வைரலாகி இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. எல் யூவி ரக கருப்பு நிறக்காரின் பின்புறம், அதிபர் ட்ரம்ப் அமர்ந்து இருக்கிறார். மேலும் தனது ஆதரவாளர்களைப் பார்த்து கையசைக்கிறார். அந்த வீடியோவில் அதிபர் நல்ல உடல் நிலையோடு இருப்பதும் உறுதியாகி இருக்கிறது. இதனால் அவரது கட்சி ஆதரவாளர்கள் உற்சாகத்தோடு பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.