காரில் உலா வந்த டெனால்ட் ட்ரம்ப்… தனது ஆதரவாளர்களுக்காக கொரோனாவிற்கு நடுவிலும் சாகசம்!!!

 

அமெரிக்க அதிபர் டொனால்ட ட்ரம்ப்பிற்கு கடந்த வியாழக்கிழமை அன்று கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாக உறுதி செய்யப்பட்டது. அதையடுத்து அவரது மனைவி மெலனியாவிற்கும் தொற்று ஏற்பட்டு இருப்பதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. வருகிற நவம்பர் 3 ஆம் தேதி அமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தல் நடைபெற இருக்கும் சூழலில் ட்ரம்ப்பிற்கு கொரோனா உறுதிச் செய்யப்பட்டு இருக்கிறது. இதனால் ஜனாநயகக் கட்சி ஆதரவாளர்கள் மத்தியில் கடும் பதற்றம் நிலவும் என எதிர்பார்க்கப் படுகிறது. இந்நிலையில் அதிபர் ட்ரம்ப் உற்சாகமாக இருப்பதைப் போன்ற வீடியோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது.

அதிபர் ட்ரம்ப்பிற்கு கொரோனா இருப்பதாக அறிவிப்பு வெளியான நிலையில் “தான் நல்ல உடல்நிலையோடு இருப்பதாக” தனது டிவிட்டர் பதிவில் அவரே தெரிவித்து இருந்தார். இருந்தாலும் அவரது வயது மூப்பு, உடல் எடை காரணமாக அலபாமா மாகாணத்தில் உள்ள வால்டர் ரெட் தேசிய இராணுவ மருத்துவ மனையில் கடந்த வெள்ளிக் கிழமை சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டார். அங்கு சிகிச்சை அளித்து வந்த மருத்துவர்கள் வரும் 48 மணிநேரம் மிகவும் ஆபத்தானவை. அதிபருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது எனக் கூறியிருந்தனர்.

இதனால் பதற்றமான நிலையில் ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வந்தன. மேலும் ஒருவேளை அதிபருக்கு கொரோனா தீவிரமடைந்தால் அதிபர் தேர்தல் என்னவாகும் என்பது போன்ற விவாதங்களும் சூடு பிடித்தன. இப்படி அமெரிக்கா முழுவதும் கடும் பதட்டமான சூழல் நிலவி வரும் வேளையில் அதிபர் நேற்று மாலை வால்டர் ரெட் மருத்துவமனை வளாகத்திற்கு வெளியே ஒரு காரில் உற்சாகமாக உலா வந்திருக்கிறார். அப்போது எடுக்கப்பட்ட வீடியோவை தனது டிவிட்டர் பக்கத்தில் அவரே வெளியிட்டு இருக்கிறார்.

அந்த வீடியோ தற்போது இணையத்தில் கடும் வைரலாகி இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. எல் யூவி ரக கருப்பு நிறக்காரின் பின்புறம், அதிபர் ட்ரம்ப் அமர்ந்து இருக்கிறார். மேலும் தனது ஆதரவாளர்களைப் பார்த்து கையசைக்கிறார். அந்த வீடியோவில் அதிபர் நல்ல உடல் நிலையோடு இருப்பதும் உறுதியாகி இருக்கிறது. இதனால் அவரது கட்சி ஆதரவாளர்கள் உற்சாகத்தோடு பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

More News

மறைந்த கணவரின் கட்-அவுட்டை அருகில் வைத்து வளைகாப்பு நடத்திய நடிகை!

பிரபல நடிகை மேக்னா ராஜின் கணவரும் பிரபல கன்னட நடிகரும், ஆக்சன் கிங் அர்ஜூனின் சகோதரருமான சிரஞ்சீவி சார்ஜா கடந்த ஜூன் மாதம் திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக காலமானார் என்பது தெரிந்ததே 

நோபல் பரிசு கடந்து வந்த பாதை… 2020 நோபல் பரிசுகள் குறித்த சில சுவாரசியத் தகவல்!!!

உலகிலேயே மிக உயரிய விருதாகக் கருதப்படும் நோபல் பரிசு ஆண்டுதோறும் சில குறிப்பிட்ட துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு வழங்கப்படுகிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 16 போட்டியாளர் இவர்கள் தான்

உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி சற்றுமுன் தொடங்கிய நிலையில் இந்த நிகழ்ச்சியின் அறிமுகத்தை வழக்கம்போல்

மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொண்ட அஞ்சலி: வைரலாகும் புகைப்படம்!

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த 5 மாதங்களுக்கு மேலாக திரைப்பட படப்பிடிப்புகள் நடக்காமல் திரை உலகமே ஸ்தம்பித்து போய் இருந்தது என்பது தெரிந்ததே.

ஆட்டத்துடன் அமர்க்களமாய் ஆரம்பித்த பிக்பாஸ் முதல் நாள்!

பிக்பாஸ் நிகழ்ச்சி நேற்று பிரம்மாண்டமாக ஆரம்பிக்கப்பட்டு 16 போட்டியாளர்களும் அறிமுகம் செய்யப்பட்டார்கள் என்பதை பார்த்தோம்.