டிரம்ப்-கிம் வரலாற்று சிறப்பு மிக்க சந்திப்பு: முடிவுக்கு வரும் பகை
Send us your feedback to audioarticles@vaarta.com
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் வடகொரிய அதிபர் கிம் ஜான் உன் ஆகியோர் இன்று சிங்கப்பூரில் இந்திய நேரப்படி காலை 6.30 மணிக்கு சந்தித்து பேசினர். வரலாற்று சிறப்பு மிக்க இந்த சந்திப்பால் இரு நாடுகளுக்கு இடையே இருந்த பகை முடிவுக்கு வருகிறது.
60 ஆண்டுகளுக்கு பின்னர் நடைபெறும் இருநாட்டு தலைவர்களின் இந்த சந்திப்பை உலகமே உற்று நோக்குகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் எதிரும் புதிருமாக இருந்த டிரம்ப்-கிம் ஆகிய இரு தலைவர்களின் அறிக்கைகள் மற்றும் டுவீட்டுக்கள் மூன்றாம் உலகப்போருக்கு வழிவகுத்துவிடுமோ என்ற அச்சத்தில் இருந்த உலக நாடுகளுக்கு இந்த சமாதான சந்திப்பு நிம்மதியை தந்துள்ளது.
சிங்கப்பூரின் சென்டோசா தீவில் நடந்த இந்த சந்திப்பின் போது, அணு ஆயுத கைவிடல் உள்ளிட்டவைகள் குறித்து இரு தலைவர்களும் ஆலோசனை நடத்தியிருக்கலாம் என கூறப்படுகிறது. இந்த சந்திப்பு அனைத்து தடைகளும் உடைக்கப்பட்டு நடைபெற்றுள்ளதாக கிம் ஜாங் உன் தெரிவித்ததாக செய்திகள் வெளியாகின. மேலும் இரு தலைவர்களும் 45 நிமிடங்கள் ஆலோசனை செய்து முடித்துவிட்ட நிலையில் மீண்டும் இன்னும் சிறிது நேரத்தில் இரண்டாம் கட்ட சந்திப்பை நிகழ்த்தவுள்ளதாக கூறப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout