ஜெயலலிதா ஆக விரும்பும் த்ரிஷா

  • IndiaGlitz, [Thursday,October 27 2016]

கோலிவுட் திரையுலகில் ஒரு நடிகையின் மார்க்கெட் அதிகபட்சம் ஐந்து வருடங்கள் மட்டுமே இருக்கும் நிலையில் கடந்த 15 ஆண்டுகளாக முன்னணி நடிகையாக இருக்கும் த்ரிஷா, இப்போதும் இளையதலைமுறை நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து இளம் நடிகைகளுக்கு போட்டியாக உள்ளார்.
தனுஷுடன் த்ரிஷா நடித்த 'கொடி' வரும் தீபாவளி தினத்தில் வெளியாகவுள்ள நிலையில் தற்போது அவர் 'மோகினி' என்ற படத்தில் மாதேஷ் இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்த படம் அடுத்த வருடம் ஜனவரியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது
இந்நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் 'தனக்கு முதல்வர் ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு படத்தில் ஜெயலலிதா கேரக்டரில் நடிக்க வேண்டும் என்று ஆசை இருப்பதாகவும், அப்படி ஒரு வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் மிஸ் பண்ண மாட்டேன்' என்றும் கூறியுள்ளார்.
ஜெயலலிதா மற்றும் த்ரிஷா ஆகிய இருவருமே சென்னை சர்ச் பார்க் பள்ளியில் படித்தவர்கள் என்பதும், ஜெயலலிதா கையினால் த்ரிஷா ஏற்கனவே விருது வாங்கியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.