டுவிட்டரில் ஆவேசம் அடைந்த த்ரிஷாவுக்கு ஏற்பட்ட திடீர் அதிர்ச்சி

  • IndiaGlitz, [Sunday,January 15 2017]

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவிக்கும் அமைப்பினர் சிலர் சமீபத்தில் த்ரிஷா நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பில் போராட்டம் செய்ததோடு அவரை பற்றி சர்ச்சைக்குரிய வகையில் சமூக வலைத்தளங்களில் விமர்சனம் செய்தனர். இதற்கு த்ரிஷாவும் தனது டுவிட்டரில் விளக்கம் அளித்ததோடு தமிழர்கள், தமிழ் கலாச்சாரம் குறித்தும் கேள்வி எழுப்பியிருந்தார்.

இந்நிலையில் திடீரென த்ரிஷாவின் டுவிட்டர் கணக்கு மர்ம நபர்களால் ஹேக் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இதனால் த்ரிஷாவும் அவரது ரசிகர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளதாக தெரிகிறது.

மேலும் ஜல்லிக்கட்டை தடை செய்ய வேண்டும் என்றும் பீட்டாவுக்கு தான் எப்போதும் ஆதரவு தெரிவிப்பேன் என்றும் த்ரிஷா கடைசியாக பதிவு செய்ததாக அவரது டுவிட்டரில் ஒரு டுவீட் இருந்துள்ளது. ஆனால் அந்த டுவீட்டை த்ரிஷா பதிவு செய்யவில்லை என்றும் ஹேக் செய்தவர்கள் அந்த பதிவை பதிவு செய்துள்ளதாகவும் த்ரிஷா விளக்கம் அளித்துள்ளார்.

More News

படப்பிடிப்பில் ப்ரியங்கா சோப்ரா காயம். மருத்துவமனையில் அனுமதி

இளையதளபதி விஜய் நடித்த 'தமிழன்' படம் உள்பட ஏராளமான திரைப்படங்களில் நடித்து பாலிவுட்டின் முன்னணி நாயகியான பிரியங்கா சோப்ரா நேற்று தொலைக்காட்சி தொடரான Quantico என்ற தொடரில் நடித்து கொண்டிருந்தபோது எதிர்பாராமல் கீழே விழுந்தார். இதனால் அவருக்கு சிறிய அளவில் காயம் ஏற்பட்டது...

வேற்றுமையில் ஒற்றுமை காண்போம். கமல்ஹாசன் பொங்கல் வாழ்த்து

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை இன்று தமிழகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஜல்லிக்கட்டு தடை என்ற ஒரு விஷயம் மட்டுமே உறுத்தலாக இருந்தாலும் இன்று காலை அனைத்து தமிழர்களும் வீட்டில் பொங்கல் வைத்து புதிய ஆடைகள் உடுத்தி கொண்டாடி வருகின்றனர்...

தமிழக காவல்துறைக்கும், சிம்புவுக்கும் நன்றி கூறிய த்ரிஷா

பீட்டா அமைப்புக்கு த்ரிஷா ஆதரவு கொடுத்து வருகிறார் என்ற ஒரே காரணத்திற்காக அவரை சமூக வலைத்தளங்களில் சிலர் மோசமாக விமர்சனம் செய்து வருகின்றனர். தெருநாய்கள் உள்பட விலங்குகளுக்கு ஆதரவு அளித்து வரும் த்ரிஷா, தான் எந்த நேரத்திலும் ஜல்லிக்கட்டுக்கு எதிரான கருத்தை கூறவில்லை என்று விளக்கம் கொடுத்துள்ளார்...

இதுதான் தமிழ் கலாச்சாரமா? த்ரிஷா ஆவேசம்

பீட்டா அமைப்புக்கு த்ரிஷா ஆதரவு கொடுத்து வருகிறார் என்ற ஒரே காரணத்திற்காக அவரை சமூக வலைத்தளங்களில் சிலர் மோசமாக விமர்சனம் செய்து வருகின்றனர். தெருநாய்கள் உள்பட விலங்குகளுக்கு ஆதரவு அளித்து வரும் த்ரிஷா, தான் எந்த நேரத்திலும் ஜல்லிக்கட்டுக்கு எதிரான கருத்தை கூறவில்லை என்று விளக்கம் கொடுத்துள்ளார்.

'தல 57' படத்தின் முக்கிய மாற்றம்

சமீபத்தில் பேட்டியளித்த இந்த படத்தின் இசையமைப்பாளர் அனிருத், இந்த படம் ஜேம்ஸ்பாண்ட் படங்களின் டைப்பில் உள்ளது என்று கூறியதில் இருந்து இந்த படத்தின் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது...