டுவிட்டரில் ஆவேசம் அடைந்த த்ரிஷாவுக்கு ஏற்பட்ட திடீர் அதிர்ச்சி

  • IndiaGlitz, [Sunday,January 15 2017]

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவிக்கும் அமைப்பினர் சிலர் சமீபத்தில் த்ரிஷா நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பில் போராட்டம் செய்ததோடு அவரை பற்றி சர்ச்சைக்குரிய வகையில் சமூக வலைத்தளங்களில் விமர்சனம் செய்தனர். இதற்கு த்ரிஷாவும் தனது டுவிட்டரில் விளக்கம் அளித்ததோடு தமிழர்கள், தமிழ் கலாச்சாரம் குறித்தும் கேள்வி எழுப்பியிருந்தார்.

இந்நிலையில் திடீரென த்ரிஷாவின் டுவிட்டர் கணக்கு மர்ம நபர்களால் ஹேக் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இதனால் த்ரிஷாவும் அவரது ரசிகர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளதாக தெரிகிறது.

மேலும் ஜல்லிக்கட்டை தடை செய்ய வேண்டும் என்றும் பீட்டாவுக்கு தான் எப்போதும் ஆதரவு தெரிவிப்பேன் என்றும் த்ரிஷா கடைசியாக பதிவு செய்ததாக அவரது டுவிட்டரில் ஒரு டுவீட் இருந்துள்ளது. ஆனால் அந்த டுவீட்டை த்ரிஷா பதிவு செய்யவில்லை என்றும் ஹேக் செய்தவர்கள் அந்த பதிவை பதிவு செய்துள்ளதாகவும் த்ரிஷா விளக்கம் அளித்துள்ளார்.