மன்சூர் அலிகான் மன்னிப்புக்கு த்ரிஷா அளித்த பதில்.. முடிவுக்கு வந்ததா பிரச்சனை?

  • IndiaGlitz, [Friday,November 24 2023]

நடிகை த்ரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய மன்சூர் அலிகான் இன்று காலை மன்னிப்பு கேட்டு அறிக்கை வெளியிட்டிருந்த நிலையில் அதற்கு த்ரிஷா தனது சமூக வலைத்தளத்தில் செய்த பதிவு இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்னாள் நடிகர் மன்சூர் அலிகான், நடிகை த்ரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதை அடுத்து த்ரிஷா அதற்கு கண்டனம் தெரிவித்தார். த்ரிஷாவுக்கு ஆதரவாகவும் மன்சூர் அலிகானுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையிலும் பலர் கருத்து தெரிவித்த நிலையில் மன்சூர் அலிகான் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது

இந்த நிலையில் இன்று காலை மன்சூர் அலிகான் வெளியிட்டுள்ள அறிக்கையில் த்ரிஷாவிடம் தான் மன்னிப்பு கேட்பதாகவும் த்ரிஷாவின் திருமணத்தில் கலந்து கொண்டு அவருக்கு ஆசி வழங்க கடவுள் எனக்கு வாய்ப்பு அளிப்பாராக என்றும் தெரிவித்திருந்தார்

இந்த நிலையில் மன்சூர் அலிகான் மன்னிப்பு குறித்து தனது சமூக வலைத்தளத்தில் த்ரிஷா தெரிவித்த போது ’தவறு செய்வது மனிதம், மன்னிப்பவர் தெய்வம்’ என்று பதிவிட்டுள்ளார். இதனை அடுத்து இந்த பிரச்சனை முடிவுக்கு வந்ததாக கருதப்படுகிறது.