என்னால் சிரிப்பை நிறுத்தவே முடியவில்லை: த்ரிஷா கூறியது எதற்கு தெரியுமா?

  • IndiaGlitz, [Tuesday,November 21 2017]

நடிகர் ஆர்யா தனது திருமணம் குறித்து ஒரு வீடியோவை வெளியிட்டார் என்பதையும் அந்த வீடியோவில் தன்னை திருமணம் செய்து கொள்ள விரும்பும் பெண் தன்னுடைய மொபைல் எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம் என்றும் தெரிவித்திருந்தார் என்பதையும் சற்றுமுன்னர் பார்த்தோம். இந்த வீடியோ விளையாட்டா? சீரியஸா? என்று தெரியாமல் வைரலாகி வருகிறது.

இந்த நிலையில் இந்த வீடியோ குறித்து நடிகை த்ரிஷா தனது டுவிட்டரில் ஒரு கருத்தை பதிவு செய்துள்ளார். ஆர்யாவின் இந்த புதிய முயற்சியில் அனைத்து அதிர்ஷ்டமும் கிடைக்க வாழ்த்துகிறேன். ஆனால் என்னால் இந்த வீடியோவை பார்த்த பின்னர் சிரிப்பை அடக்கவே முடியவில்லை' என்றும் குறிப்பிட்டுள்ளார்

ஆர்யாவும் த்ரிஷாவும் நீண்டகால நண்பர்கள் என்பதும் இருவரும் இணைந்து 'சர்வம்' என்ற படத்தில் நடித்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.