த்ரிஷாவுக்கு யூனிசெப் அமைப்பு கொடுத்த மிகப்பெரிய கெளரவம்
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகை த்ரிஷா கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக கோலிவுட் திரையுலகில் மட்டுமின்றி தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார். இந்த நிலையில் யூனிசெப் அமைப்பில் குழந்தைகளுக்காக குரல் கொடுக்கும் பதவி அவரை தேடி வந்துள்ளது.
யூனிசெப் அல்லது ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் (United Nations Children's Fund or UNICEF) என்று கூறப்படும் உலகளாவிய அமைப்பு கடந்த 1946ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. ஐக்கிய நாடுகளின் பொதுச்சபையினால் இரண்டாம் உலகயுத்தத்தில் அழிவுற்ற நாடுகளில் உள்ள சிறு குழந்தைகளுக்கு உணவு மற்றும் சுகாதார வசதிகளை வழங்கும் நோக்குடன் இந்த அமைப்பு ஆரம்பிக்கப்பட்டது.
இந்த அமைப்பின் தமிழகம் மற்றும் கேரள மாநில தலைவர் ஜோப் ஜக்காரியா என்பவர் கடந்த குழந்தைகள் தினத்தில் த்ரிஷாவுக்கு இந்த கெளரவத்தை வழங்கியுள்ளார். இந்த பதவி மூலம் த்ரிஷா தமிழகம் மற்றும் கேரள மாநிலங்களில் உள்ள குழந்தைகளின் உரிமைகள், சுகாதாரம், கல்வி மற்றும் பாலியல் கொடுமை ஏற்படாத வகையில் தடுத்தல் ஆகியவற்றுக்காக குரல் கொடுப்பார்.
ஏற்கனவே த்ரிஷா குழந்தைகளின் நலனுக்காக தனிப்பட்ட வகையில் உதவி செய்து வரும் நிலையில் உலகளாவிய அமைப்பு ஒன்று அவருக்கு இந்த பதவியை கொடுத்து கெளரவித்துள்ளது. இந்த பதவியை பெறும் முதல் தென்னிந்திய நடிகை த்ரிஷா என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments