பிரகாஷ்ராஜூக்கு நன்றி கூறிய த்ரிஷா: ஏன் தெரியுமா?

  • IndiaGlitz, [Thursday,October 01 2020]

பிரபல நடிகர் பிரகாஷ் ராஜ் சமீபத்தில் கிரீன் இந்தியா சேலஞ்சை ஏற்று தனது மகனுடன் இணைந்து தனது தனது வீட்டின் தோட்டத்தில் செடிகளை நட்டார் என்றும் இது குறித்த வீடியோ சமூக வளைதளத்தில் வைரலாகி வருகிறது என்பதையும் சற்று முன் பார்த்தோம்.

மேலும் அவர் இந்த சேலஞ்சை நடிகர்கள் மோகன்லால், சூர்யா, நடிகைகள் ரக்‌ஷிதா ஷெட்டி, ரம்யா கிருஷ்ணன் மற்றும் த்ரிஷா ஆகியோர்களுக்கு விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது, இந்த நிலையில் பிரகாஷ்ராஜின் சேலஞ்சை தான் ஏற்றுக்கொள்வதாக நடிகை த்ரிஷா தனது சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார். மேலும் தன்னை நாமினேட் செய்ததற்கு பிரகாஷ்ராஜுக்கு நன்றி என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனை அடுத்து த்ரிஷா தனது வீட்டின் தோட்டத்தில் செடி நடும் புகைப்படம் மற்றும் வீடியோக்கள் விரைவில் அவரது சமூக வலைதளத்தில் பதிவு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிரகாஷ்ராஜ் மற்றும் த்ரிஷா ஆகியோர் இணைந்து ’அபியும் நானும்’ ‘கில்லி’ உள்பட பல படங்களில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

பாலாவின் 'வர்மா' ரிலீஸ் தேதி அதிகாரபூர்வ அறிவிப்பு!

தேசிய விருது பெற்ற பிரபல இயக்குனர் பாலாவின் இயக்கத்தில் விக்ரம் மகன் துருவ் விக்ரம் நடித்த முதல் திரைப்படம் 'வர்மா'. இந்த திரைப்படம் ரிலீஸுக்கு தயாராக இருந்த

30 வருடத்திற்கு பின் மீண்டும் தமிழ்ப்படத்தில் அமலா: இயக்குனர், ஹீரோ யார்?

சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் 'வேலைக்காரன்', 'மாப்பிள்ளை', உலக நாயகன் கமல்ஹாசனுடன் 'சத்யா', 'வெற்றி விழா' பிரபுவுடன் அக்னி நட்சத்திரம்', 'இல்லம்', 'நாளைய மனிதன்,

எஸ்பிபி முதலில் பாடியது எனக்குதான், எம்ஜிஆருக்கு அல்ல: சிவகுமார்

பிரபல பின்னணி பாடகர் எஸ்பிபி அவர்கள் சமீபத்தில் காலமானதை அடுத்து அவருடன் பழகிய நாட்கள், நேர்ந்த அனுபவங்கள் குறித்து பல திரையுலக பிரமுகர்கள்

சூர்யாவை சவாலுக்கு அழைத்த பிரபல வில்லன் நடிகர்: வீடியோ வைரல்

கடந்த சில வாரங்களாக திரையுலகினர் இடையே கிரீன் இந்தியா சேலன்ச் என்ற சேலஞ்ச் பரவி வருகிறது என்பது தெரிந்ததே,

அஜித்தின் 'வலிமை' படத்தில் இணையும் ஹாலிவுட் கலைஞர்: பரபரப்பு தகவல்

தல அஜித் நடிப்பில் ஹெச்.வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'வலிமை'. இண்டர்போல் அதிகாரி கேரக்டரில் நடித்து வரும் அஜீத்துக்கு